For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்- மோடி

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி சுதந்திர தின உரை- வீடியோ

    டெல்லி: ஊழலையும் கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

    நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில் கருப்பு பணம் பதுக்குவோருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்.

    ஏழைகளின் குரல்

    ஏழைகளின் குரல்

    டெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது. பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது.

    பணம்

    பணம்

    நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது.

    வளர்ந்து வருகிறது

    வளர்ந்து வருகிறது

    முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது. பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

    மிருகங்கள்

    மிருகங்கள்

    மத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பாலியல் குற்றங்களை செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல என்றார் பிரதமர் மோடி.

    English summary
    PM Narendra Modi says that Corruptionist and black money hoarderers should be punished.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X