For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாபில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை பொதுமக்கள் அணிய வேண்டாம்: ராணுவம் அறிவுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சண்டிகர்: தீவிரவாத தாக்குதலை தடுக்க பொதுமக்கள் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் போர் உடைகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவம் அறிவுறுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். நான்கு நாள் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்ததனர்.

Police issues orders prohibiting selling army dress

இந்நிலையில் விழாக் காலங்களில் ராணுவம், போலீஸ் உடைகளை ஒரு சிலர் அணிவது வழக்கம். ஆனால் சண்டிகரில் ராணுவ உடைகள் அணிவதற்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அதிகாரபூர்வ செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், .தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், காவல்துறையினரும் மற்ற மத்திய படைகளும் போர் சீருடைகளை அணிய வேண்டாம். இது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல மேலும் இந்த வகையில் ஆடை அணிவது தவறான எச்சரிக்கைக்கு வழிகோலும் என்றும் அவர் கூறினார்.

ராணுவ சீருடைகளை விற்பனை செய்ய விரும்பும் கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதோபோல் டெய்லர் கடையில் யாரெனும் ராணுவ உடை தைப்பதற்கு வந்தால் அவர்களிடம் போட்டோ ஒட்டிய அட்டையில் சுய கையெப்பம் வாங்கிய பின்னரே ஆடை தைத்து கொடுக்கமாறு கூறப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

English summary
prohibitory orders against selling or stitching of uniforms of military, paramilitary or police forces without properly ensuring identity of the buyer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X