For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1க்கு ஒரு பாட்டில் தண்ணீர்.. ரயில்வே அமைச்சகம் முடிவு!

ரயில் பயணிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பயணிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மலிவு விலையில் விநியோகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

Railway ministry plans to sell one bottle of water for one rupee

450 ரயில் நிலையங்களில், 1100 தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரங்களை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவு பெற உள்ளதாகவும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு ஒரு பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.1-க்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பாட்டில் தண்ணீரானது 300 மில்லி லிட்டர் அளவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Railway ministry plans to sell one bottle of water for one rupee. Railway ministry says that with this plan arround 2000 people will get job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X