For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கூல் பீஸ் கட்ட வீட்டு வேலை செய்யும் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: ஹரியானா மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல் வீட்டு வேலை செய்து பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஷு மிட்டல். கடந்த ஆண்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அவர் 46 கிலோ பிரிவில் பதக்கம் வென்றார். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் குவாலியரில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹரியானா சார்பில் கலந்து கொண்டார்.

Shocking! Gold medalist boxer Rishu Mittal forced to work as maid

அவர் ஒரு கடையில் வேலை பார்க்கும் தனது சகோதரருடன் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக் கட்டணத்தை செலுத்த வழி இல்லாததால் அவர் காலையில் பல வீடுகளில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பள்ளிக் கட்டணத்தை கட்டுகிறார். வீ்ட்டு வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் அவர் மாலை வேளையில் குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இது குறித்து அவரின் பயிற்சியாளர் ராஜிந்தர் சிங் கூறுகையில்,

ரிஷு திறமைசாலி. ஆனால் அவர் சாதிக்க அவருக்கு ஆதரவு தேவை. அந்த பெண் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ரிஷு பணம் சம்பாதிக்க பாத்திரம் கழுவி, தரையை துடைத்து, சமைத்து பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார்.

அரசு மட்டும் அவருக்கு ஆதரவு அளித்தால் அவர் ஒரு நாள் மேரி கோம் போன்று நம் நாட்டை பெருமை அடையச் செய்வார் என்றார்.

English summary
A state-level gold medallist boxer, Rishu Mittal, is being forced to work as a domestic help to continue her passion for the sport and to support her schooling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X