For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை.. மேற்பார்வைக் குழுவுக்கு மத்திய அரசு அனுமதி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உறுதி செய்ய, பாதுகாப்பை கண்காணிக்க மேற்பார்வைக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

Supervisory committee for Mullai periyar dam to be named shortly

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது என கடந்த மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்தவும் அனுமதி அளித்தது. அத்துடன், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தின் அளவை உறுதி செய்யவும், அணையின் பாதுகாப்பு பணிகளைக் கண்காணிக்கவும் மேற்பார்வைக் குழுவை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த குழுவுக்கு மத்திய நீர் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தலைவராகவும், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதி உறுப்பினர்களாகவும் இடம்பெறுவர் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில் மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து விரைவில் முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A supervisory committee for the Mullai periyar dam, a contentious issue between Kerala and Tamil Nadu, will be constituted shortly to look into the safety of the structure and increasing the full reserve level to 142 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X