For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

There is no controversy, Buddha was born in Nepal: India
டெல்லி: ஒரு தனியார் தொலைகாட்சி தொடரில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என வலியுறுத்தப்பட்டது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேபாள இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேபாளத்தை சேர்ந்த பலர் எதிர்த்து கருத்து தெரிவித்தனர்.

கவுதம புத்தர், கி.மு.563 ஆம் ஆண்டு நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நிலையில் புத்தர் இந்தியாவில் பிறந்தார் என்று தனியார் தொலைக்காட்சி கூறியது.

அதே சமயம், புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை எனவும் இலங்கையில் பிறந்ததாகவும் அதற்கான புனித தள சாட்சியங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்திருந்தார்.

புத்தர் இந்தியாவில் பிறக்கவில்லை. அதனால் பௌத்த மத வழிபாடுகளுக்காக இந்தியாவிற்கு செல்ல வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உடுவே தம்மாலோக தேரரின் இந்தக் கருத்து குறித்து பகிரங்க விவாதம் நடாத்தத் தயார் என நாகொட விபஸ்ஸி தேரர் என்பவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை என ரத்மலானை தர்ம ஆய்வு மையத்தைச் சேர்ந்த நாகொட விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

கௌதம புத்தரின் பிறப்பு தொடர்பில் இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களை வெளியிடுவதனையிட்டு உடுவே தம்மாலோக தேரர் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் தான் பிறந்தார். இதில் எந்தவித சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை. உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம். இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
India today settled a row over the birthplace of Lord Buddha with Foreign Secretary Sujatha Singh saying there is no controversy that Buddha was born in Nepal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X