For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

பொக்காரோ: நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்த மண்ணில் யார் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும்.

We will implement NRC in all states, says Rajnath Singh

ஆனால் சில கட்சிகள் இதனை விமர்சிக்கின்றன. இந்த நடவடிக்கையை மதம் சார்ந்த பிரச்சனையாக்க்கின்றனர்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மிக பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அளித்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற இருக்கிறோம்.

நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த போது அது நடக்காது என்று கூறினார்கள். இப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

English summary
Union Defence Minister Rajnath Singh said that, We will implement NRC across the country. Every Indian has a right to know who are the illegal immigrants in their land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X