மதசார்பின்மையை பின்பற்றுவார்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டேவின் அநாகரீக விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்நாடகம் : இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் மதசார்பின்மையை பாஜக விரைவில் அரசியலமைப்பிலிருந்தே நீக்கிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவரின் பேச்சு.

கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தில் உள்ள கூகானூர் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே மதசார்பற்றவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார்.

 Whether BJP plans to Destroy the India's Identity?

இது தொடர்பாக அவர் கூறுகையில், விரைவில் மாற்றங்கள் இந்த நாட்டில் நிகழும். அதற்காக தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். மதசார்பற்றவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு அடையாளமே இல்லை. அவர்களின் பெற்றோர்கள் யார் என்று கூட அவர்களுக்கு தெரியாது. பெற்றோரை தெரியாதவர்கள் தான் தங்களை மதசார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்வார்கள்.

தன்னை முஸ்லீம் என்றும், கிறிஸ்துவன் என்றும், பிராமணன் என்றும், இந்து என்றும் அழைத்து கொள்பவர்களை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சி இருக்கும், ஏனென்றால் அவர்களின் வம்ச ரத்தம் என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் மதசார்பற்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, என்று அமைச்சர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As the BJP minister Anand kumar hegde's s hate speech about the secularism has ignites the controversy whether the BJP is going to remove the word "secular" from the constitution.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற