For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிம் பயிற்சியாளர், ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்... திரிபுராவின் அடுத்த முதல்வர் பிப்லப் குமார் தேவ்?

திரிபுராவின் பாஜக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் பிப்லப் குமார் தேவ் யார்?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    திரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் - வீடியோ

    அகர்தலா : திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியை அகற்றிவிட்டு பாஜக வெற்றி கொடி நட்டிருக்கும் நேரத்தில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வருக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் பிப்லப் குமார் தேவ் யார் என பார்க்கலாம்.

    திரிபுராவில் 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை அகற்றுவதற்காக பாஜக தீயாக வேலை செய்தது கைமேல் அவர்களுக்கு பலனை கொடுத்துள்ளது. திரிபுராவின் ஐபிஎஃப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மையை பெற்றுள்ளது பாஜக.

    Who is Biblap Kumar Deb?

    பாஜகவின் முதல்வராக யார் பொறுப்பேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவின் திரிபுரா மாநில தலைவராக கடந்த 7 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் பிப்லப் குமார் தேவ். இவர் தலைமையில் தான் தேர்தலை பாஜக கூட்டணி சந்தித்தது.

    திரிபுராவில் பிறந்த பிப்லப் குமார் தேவ் சில ஆண்டுகள் டெல்லியில் வசித்து வந்தார், ஜிம் பயிற்சியாளராக இருந்த இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தன்னார்வலராக இருந்துள்ளார்.

    அரசியலில் ஈடுபட விரும்பியவர் பாஜகவில் சேர்ந்தார். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்க இவர் மேற்கொண்ட பரப்புரைகள் பாஜக, திரிபுரா மாநில பாஜக தலைவராக்கியது.

    49 வயது பிப்லப் குமார் தேவ் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டவர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் திரிபுரா மாநில பொறுப்பாளரான சுனில்தியோடர் பரிந்துரையின் பேரிலேயே பிப்லப் திரிபுரா மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    திரிபுராவின் மண்ணின் மைந்தன் முகம் பாஜகவிற்கு தேவைப்பட்டதால் பிப்லப் குமாரை தேவை தேர்ந்தெடுத்ததாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறுகிறார். எனவே பிப்லப் தேவ் குமாருக்கு முதல்வருக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Tripura's next chief minister is that of Biplab Kumar Deb, the 48-year-old state party chief. A former RSS volunteer, gym trainer Deb is the party's face and is credited for its turnaround in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X