பாஜக வசம் போகும் 21வது மாநிலம்.. கர்நாடகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடகத்தில் பாஜக வெற்றி.. கர்நாடகத்தில் மீண்டும் காவி

  பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக முன்னிலை வகித்து வருவதால் அந்த மாநிலத்தின் முதல்வராகிறார் எடியூரப்பா. காவிக் கொடி பறக்கும் மாநிலங்களில் கர்நாடகம் 21-ஆவது மாநிலமாகிறது.

  கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே சொல்லப்பட்டு வந்தது.

  Yediyurappa will become the CM of Karnataka

  ஆனால் டுடேஸ் சாணக்கியா கருத்து கணிப்பு பாஜக 120 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. மற்ற கருத்து கணிப்புகள் அனைத்தும் தொங்கு சட்டசபை மட்டுமே அமையும் என்று கூறியிருந்தது.

  இந்நிலையில் பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே எடியூரப்பா கூறியது போல் அவர் முதல்வராகிறார். ஏற்கெனவே கோவா, உ.பி, திரிபுரா, குஜராத் என 20 மாநிலங்களில் பாஜகவின் காவி கொடி பறந்து வருகிறது.

  அந்த வகையில் காவிக் கொடி பறந்து வரும் மாநிலங்களில் 21-ஆவது மாநிலம் கர்நாடகமாக விளங்குகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yeduyurappa will become the CM of Karnataka. BJP catches 21st state in India.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற