For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகின் புதிய குடியரசு நாடானது பார்படோஸ்- நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி நீக்கம்!

Google Oneindia Tamil News

பிரிஜ்டவுன்: தங்களது நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு உலகின் புதிய குடியரசு நாடாக பிரகடனம் செய்திருக்கிறது பார்படோஸ்.

 கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

கரிபியன் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடுகளில் ஒன்று பார்படோஸ். ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், வெள்ளை இனத்தவர் என பல்வேறு தரப்ப்பு இன மக்கள் இணைந்து வாழும் குட்டி தேசம் இது.

400 ஆண்டுகளுக்கு முன்னர்..

400 ஆண்டுகளுக்கு முன்னர்..

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேய ஏகாதிபத்தியின் பிடியில் சிக்கியது இந்த தேசம். அப்போது உலகில் இருந்த இருந்த அடிமை முறைதான் பார்படோஸை ஒரு தேசமாக்க உருவாக்கியது. இந்த நாட்டின் தற்போதைய மக்கள் தொகை 2.8 லட்சம் பேர்.

நாட்டின் தலைவர் பிரிட்டன் அரசி

நாட்டின் தலைவர் பிரிட்டன் அரசி

உலகம் முழுவதும் நீடித்த அடிமுறை பார்படோஸில் 1834-ல் தான் முடிவுக்கு வந்தது. இதன் பின்னரும் பிரிட்டனின் ஒரு அங்கமாக இருந்த பார்படோஸ் 1966-ம் ஆண்டு விடுதலை பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்நாட்டின் தலைவராக பிரிட்டன் ராணி எலிசபெத் இருந்து வந்தார். அவரது பிரதிநிதியாக அதாவது கவர்னர் ஜெனரலாக சாண்ட்ரோ மசோன் பதவி வகித்தார்.

குடியரசானது பார்படோஸ்

குடியரசானது பார்படோஸ்

கடந்த ஆண்டு முதலே பார்படோஸ் குடியரசு குறித்த உரையாடல்கள் உரத்து கேட்டு வந்தன. அண்மையில் பார்படோஸ் நாட்டின் முதலாவது அதிபர் தேர்தலும் நடத்தப்பட்டது. அதிபர் தேர்தலில் சாண்ட்ரோ மசோன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பார்படோஸ் நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி எலிசபெத் நீக்கப்படுவதாகவும் இனி பார்படோஸ் புதிய குடியரசு நாடாக திகழும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்தான் பார்படோஸ் நாட்டின் தலைவராகவும் திகழ்வார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்கேற்றார்.

400 ஆண்டுகால உறவு முடிவடைந்தது

400 ஆண்டுகால உறவு முடிவடைந்தது

கடந்த 400 ஆண்டுகாலமாக இங்கிலாந்துடனான பார்படோஸின் அனைத்து உறவுகளும் முடிவுக்கு வந்துள்ளன. 1992-ம் ஆண்டு இதேபோல் மொரீஷியஸ், பிரிட்டன் ராணி எலிசபேத்தை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. தற்போதும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா என உலகில் 15 நாடுகள் பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத்தை தங்களது நாட்டின் தலைவராகவே கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Barbados had Removed Britain's Queen Elizabeth as head of state and Declared a new republic Nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X