For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரெக்ஸிட் முடிவு: ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியது பிரிட்டன்... உலக சந்தைகள் ஆட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

லண்டன்: பிரெக்ஸிட் முடிவுகள் முழுமையாக வந்துவிட்டன. ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறிவிடலாம் என 51.8 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்துவிட்டதால், பிரிட்டன் மட்டும் யூனியனிலிருந்து வெளியேறுகிறது.

பிரெக்ஸிட் என்ற இந்த பொது வாக்கெடுப்பு வியாழன் அன்று நடந்தது.

பொதுத் தேர்தலை விட அதிக மக்கள் பங்கேற்ற தேர்தல் இது. யூனியனிலிருந்து வெளியேறலாம், வெளியேறக் கூடாது என்ற இரு தரப்பினருமே சரிக்கு சரியான பலத்தில் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Brexit referendum: Britain exits from EU

வாக்கெடுப்பு முடிவில் 51.8 சதவிகிதம் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இதனால் உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் இன்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன. பிற்பகலில் இந்தியச் சந்தைகள் சென்செக்ஸ் 3 சதவிகிதமும், நிஃப்டி 3.5 சதவிகிதம் சரிவு கண்டது.

ஹாங்செங், ஷாங்காய், டவ்ஜோன்ஸ் உட்பட அனைத்து ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக நிக்கி 8.60 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

பிரிட்டனின் இந்த முடிவால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் உண்டாகும் என்று வல்லுநர்களால் கணிக்கப்படுகிறது.

சர்வதேச நாணயங்களான யூரோ, பவுன்ட் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று ஆட்டம் கண்டது.

English summary
With 51.8 percent votes in Brexit Referendum, the Britain is exit from the European Union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X