For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு நோ ஒன் திங்... இந்த நியூ டிரெஸ் தைக்க லீலிக்கு 3 மணி நேரம்தான் ஆச்சாம்!!

சீன பெண், கோணிப்பைகளை தன் திருமணத்திற்கு ஆடையாக அணிந்து கொண்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிமெண்ட் சாக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உடை-வீடியோ

    கான்ஷூ: கல்யாண பெண் என்றால் இப்படித்தான் டிரஸ் பண்ணிக்கனும், சிங்காரம் பண்ணிக்கணும் என்று கட்டாயமா என்ன? ஒரு சீன பெண் தன் திருமணத்தன்று வித்தியாசமான உடையை அணிந்திருக்கிறார். அது என்ன உடை? ஏன் என்று படியுங்கள்.

    சீனாவில் சிமெண்ட் சாக்குகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உடையை திருமண ஆடையாக மணப்பெண் அணிந்து கொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

    [தாய் எனும் கோவில்.. வயலுக்கு ஓடி வந்த மகன்.. காலில் விழுந்த உணர்ச்சி காட்சி!]

    ஓடி ஓடி உழைத்த லீலி

    ஓடி ஓடி உழைத்த லீலி

    சீனாவில் கான்ஷூ என்ற மாகாணம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் டான் லீலி. மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண். லீலிக்கு அவரது அப்பா சின்ன வயசிலேயே புற்றுநோயால் இறந்துபோய் விட்டார். அதனால குடும்பத்தில் இன்னும் வறுமை தலைவிரிச்சு ஆடியது. மொத்த சுமையும் லீலி தலைமேலதான் விழுந்தது. அப்போது முதல் உழைக்க தொடங்கினார் லீலி.

    சொந்த வீடு கனவு

    சொந்த வீடு கனவு

    நிறைய வேலைகளை பார்த்தார். ஓடியாடி உழைத்தார். மரம் வெட்டுவது, சமையல் வேலை என ஒன்றையும் விடவில்லை. குடும்பத்தில் ஒவ்வொரு கடமையையும் செய்து முடித்தார். எல்லோரும் லீலியை ஒரு திருமணம் செய்து கொள்ள சொன்னார்கள். அதற்கு லீலி, ஒரு வீடு சொந்தமாக கட்டிய பிறகுதான் நான் கல்யாணம் செய்துப்பேன் என்று கறாராக சொல்லி விட்டார். அதோடு அந்த வீடு கட்டுவதற்காக திரும்பவும் உழைத்தார்.

    புது டிரஸ் இல்லை

    புது டிரஸ் இல்லை

    வீட்டை கட்டி முடிப்பதற்குள் நிறைய பிரச்சனைகள் வரிசை கட்டி வந்தன. ஒருவழியாக வீடு கட்டி முடித்தாயிற்று. அதற்கு பிறகுதான் திருமணம் செய்ய முடிவு செய்தார். இப்போ லீலிக்கு 28 வயதாகிறது. சமீபத்தில்தான் யங் முன் கை என்பவருடன் கல்யாணம் நடந்தது. ஆனால் இந்த கல்யாணத்துக்கு லீலி புது டிரஸ் எடுக்கவில்லை. மாப்பிள்ளை வற்புறுத்தியும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

    லீலி பட்ட கஷ்டங்கள்

    லீலி பட்ட கஷ்டங்கள்

    அதற்கு பதிலாக திருமணத்தன்று கோணிப்பைகளை வைத்து ஆடை ஒன்றை தைத்து போட்டு கொண்டார். அந்த கோணிப்பைகள் எல்லாம் தான் கட்டிய புது வீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சிமெண்ட் சாக்கு பைகள். உயிருக்குயிராக கட்டிய அந்த வீட்டிற்கு உபயோகமான கோணிப்பைகளையே தைத்து ஆடையாக வடிவமைத்து போட்டுக் கொண்டார். இந்த டிரெஸ் பார்க்கும்போதெல்லாம் லீலிக்கு தன் வீடு கட்டிய போது பட்ட கஷ்டங்கள்தான் ஞாபகத்துக்கு வருமாம். யு நோ ஒன் திங்... இந்த நியூ டிரெஸ் தைக்க லீலிக்கு 3 மணி நேரம்தான் ஆச்சாம்!

    English summary
    Chinese woman makes a bridal gown with 40 cement bags.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X