For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்சில் அவசர நிலை பிரகடணத்தை நீட்டிக்க விரும்பும் அதிபர் ஹாலண்டே

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வரையில் அந்நாட்டில் அவசர நிலை பிரகடணத்தை நீட்டிக்க அதிபர் பிராங்காய் ஹாலண்டே விரும்புவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

பாரிஸ்: அடுத்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெறும் வரை அந்நாட்டில் அவசர நிலை பிரகடணத்தை நீட்டிக்க அதிபர் பிராங்காய் ஹாலண்டே விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் மோராக்கான் நகரத்தில் தீவிரவாத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது.

French wants to extend state of emergency: hollande

இது வருகிற 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், வருகிற ஏப்ரல்-மே மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு தேர்தல் பேரணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்த பேரணிகளால் அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இதனால், நாட்டில் அமல்படுத்தபட்டுள்ள அவசர நிலை பிரகடணத்தை அதிபர் தேர்தல் வரை நீட்டிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்கான திட்ட அறிக்கையை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாக அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இத்தகவலை பிரான்ஸ் பிரதமர் மனுவேல் வால்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது வருகிற ஜனவரி மாதம் வரை நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை பிரகடணத்தை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் தாம் கோரிக்கை வைக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளதால் அங்கு எவரையும் வீட்டுக் காவலில் வைக்க முடியும். மேலும், அதிரடியாக சோதனைகளை நடத்த இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் முறையே ஏப்ரல் 23, மே 7-ம் தேதிகளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அங்கு இரண்டு கட்டங்களாக அதிபர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

English summary
French President Francois Hollande said he wants to extend the state of emergency until the presidential election in April-May 2017
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X