ட்ரம்பிடம் பல்பு வாங்கி பாகிஸ்தான்.. மீம் போட்டு பாக்., அரசை கலாய்க்கும் சொந்த மக்கள்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தத்தைக் கண்டு, பக்கத்து வீட்டுக்காரர்களான பாகிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டுத் தலைவர்களை நக்கல் அடித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். மீம்கள் போட்டு பாகிஸ்தான் மக்கள் தங்களின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசீம் முனீரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
‛‛பக்கத்து வீட்டுக்காரி குழந்தை பெத்துட்டானு.. எதிர்த்த வீட்டுக்காரி உலக்கையை எடுத்து வயிற்று இடித்து கொண்டாளம்''.. இது நம் ஊர்களில் சொல்லப்படும் சொலவடை.. இதன் அர்த்தம் பிறரின் மகிழ்ச்சியை கண்டு பொறாமைப்படுவது தான். இப்படித்தான் நம் நாட்டை பார்த்து பாகிஸ்தான் மக்கள் குமுறி வருகின்றனர்.

இந்தியாவுக்கான பரஸ்பர வரி விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைப்பதாக கூறியுள்ளது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை குறைக்கவும் வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது.
பொங்கும் பாகிஸ்தானிகள்
இது சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்கா நமக்கு விதித்த 50 சதவீத மொத்த வரி வெறும் 18 சதவீதமாக குறையும். இதைக் கேட்டதுமே, நம் பக்கத்து நாட்டு மக்கள் பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள்.
"என்னது... அவங்களுக்கு வரி குறைப்பா? அப்போ எங்களுக்கு?" என்று கேட்ட பாகிஸ்தானிகளுக்குக் கிடைத்த பதில்: "உங்களுக்கு 19 சதவீதம் டாக்ஸ்!" என்பதுதான். பாகிஸ்தானுக்கும், இந்தோனேஷியாவுக்கும் அமெரிக்கா விதித்துள்ள வரி 19 சதவீதம், வங்கதேசம் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு 20 சதவீதம் டாக்ஸ், சீனாவுக்கு 34 சதவீதம் வரி போட்டுள்ளது அமெரிக்கா.
ஐஸ் வைத்தும் பலனில்லை
இதனால், பாகிஸ்தான், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரை வைத்து மீம்கள் அள்ளுகின்றன.
பாகிஸ்தானின் தற்போதைய நிலையை நினைத்தால் அவர்களுக்கே, சிரிப்புதான் வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு எல்லாம் பரிந்துரை செய்து, உலகமே வியக்கும்படி "ஐஸ்" வைத்தார்கள் பாகிஸ்தான் தலைவர்கள். ஆனால், கடைசியில் ட்ரம்ப்போ இந்தியாவுக்கு 'ரெட் கார்பெட்' விரித்து, 18 சதவீத வரியை குறைத்துவிட்டார் என்று புலம்புகின்றனர் பாகிஸ்தானியர்கள்.
நோபல் பரிசு வரை போனேமே
இதுதொடர்பாக பாகிஸ்தான் நெட்டிசன்கள், "நாங்க என்னவோ நோபல் பரிசு வரைக்கும் பிளான் பண்ணோம், ஆனா எங்களுக்கு கிடைச்சதோ வெறும் எக்ஸ்ட்ரா டாக்ஸ் தான்" எனத் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் வகையில் மீம்ஸ் போடுகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு குறிப்பிட்ட மீம் தான் இப்போது அந்த நாட்டில், ஹைலைட்.
பெட்டிக்குள் கல்
இந்தியப் பிரதமர் மோடியும் ட்ரம்ப்பும் சிரித்துப் பேசி டீல் முடிக்கும்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஒரு மரப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு பரிதாபமாக நிற்பது போல் அந்த மீம் சித்திரிக்கப்பட்டுள்ளது. அசீம் முனீர் வைத்திருக்கும் அந்தப் பெட்டிக்குள் டாலர்கள் இருக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.
ஆனால் உள்ளே இருப்பதோ வெறும் 'கற்கள்' தான் என்று பாகிஸ்தானிகளே அவரை வச்சுச் செய்கிறார்கள். "கையில காசு இல்ல.. வாயில தோசை மட்டும் தான்" என்பது போல இருக்கிறது இவர்களின் நிலைமை.
இந்தியா முன்னேறிவிட்டது
அதேபோல் ஜாவேத் ஹசன் என்ற பாகிஸ்தான் சோஷியல் மீடியா யூசர் ஒரு நச் கேள்வியைக் கேட்டுள்ளார்: "இந்தியா ஒன்றும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு நல்ல டீல் கிடைத்துள்ளது. நாம் என்னவெல்லாம் ஐஸ் வைத்தோம்? நமக்குக் கிடைத்தது என்னவோ கூடுதல் வரி மட்டும்தான்!" என்று புலம்பியுள்ளார்.
இன்னொரு யூசர் ஒரு படி மேலே போய், "இந்தியாவிடம் உலகிற்குத் தர நிறைய பொருட்கள் உள்ளன. நம்மிடம் என்ன இருக்கிறது? உயர்தரமான பொருட்கள் தயாரிப்பதில் இந்தியா முன்னேறிவிட்டது, நாம் இன்னும் எதையும் உருப்படியாகத் தயாரிக்கவில்லை" எனத் தன் நாட்டு நிலையைச் சுயபரிசோதனை செய்திருக்கிறார்.
என்ன பாவமோ?
மேலும் ஆசிய நாடுகளின் ஏற்றுமதி வரி விகிதத்தைப் பார்த்தாலே பாகிஸ்தானின் பிபி எகிறுகிறது. மலேசியா, தாய்லாந்து, ஏன்.. பாகிஸ்தான் கூட 19 சதவீத வரியைச் சுமக்க வேண்டும். வங்கதேசம் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு 20 சதவீத வரி.
ஆனால், இந்தியாவுக்கு மட்டும் அது 18 சதவீதம்! "நாங்க என்ன பாவம் பண்ணோம்?" என்று கேட்கும் பாகிஸ்தானுக்கு, "முதலில் உருப்படியாக எதையாவது உற்பத்தி செய்யுங்கள்" என்று சொந்த நாட்டு மக்களே கமெண்ட் செக்ஷனில் அட்வைஸ் மழை பொழிகிறார்கள்.
பறக்கும் மீம்கள்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் டெக்ஸ்டைல், கெமிக்கல் மற்றும் தோல் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் அதிகமாக கால் பதிக்க போகின்றன. இதைப்பார்த்து பாகிஸ்தானின் ஏற்றுமதியாளர்கள் இப்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர். "இந்தியாவிடம் தரமான பொருட்கள் உள்ளன, எங்களிடம் கடன் வாங்கும் திறமை மட்டுமே உள்ளது" எனப் பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் சுயபரிசோதனை மீம்கள் பறக்கின்றன.
பாகிஸ்தான் விக்கெட் காலி
இந்தியாவின் இந்த பொருளாதார 'சிக்ஸர்', பாகிஸ்தானின் 'விக்கெட்'டை காலி செய்துவிட்டது என்றே சொல்லலாம். தற்போது நிலவரப்படி ஆசிய நாடுகளுக்கான வரிப் பட்டியல் இப்படித்தான் இருக்கிறது:
* பாகிஸ்தான்: 19%
* மலேசியா, தாய்லாந்து: 19%
* வங்கதேசம், வியட்நாம்: 20%
* இந்தியா மட்டும்: 18%
"வரிசையில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் மாணவனைப் போலப் பாகிஸ்தான் பரிதாபமாக நிற்கிறது" என நெட்டிசன்கள் வாரிச் சுருட்டுகிறார்கள்.
அனலாக தெறிக்கும் பாகிஸ்தானிகள்
அமெரிக்க அதிபரைப் புகழ்ந்து தள்ளியும், "பக்கத்து வீட்டுக்காரரான, இந்தியா பக்காவாக, டீல் பேசி முடித்துவிட்டார்கள்" என்ற ஆதங்கம் பாகிஸ்தான் மீம் கிரியேட்டர்களிடம் அனலாகத் தெறிக்கிறது. மொத்தத்தில், இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாபெரும் வெற்றி. ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது ஒரு தீராத தலைவலி.
"பக்கத்து வீட்டுக்காரன் புது கார் வாங்கினால் அழுபவர்களைப் போல" பாகிஸ்தான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறது. அதேநேரம், இந்திய விவசாயிகள் நலன் அடகு வைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மறுத்துள்ளார். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!












Click it and Unblock the Notifications