தமிழர்களுக்கு ஒன்று என்றால் அப்துல்லா உடனே தொடர்பு கொள்வார்! குவைத்துக்கான இந்தியத் தூதர் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

குவைத்: தமிழர்களின் நலனுக்காக தன்னை அதிகம் முறை தொடர்பு கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா என, குவைத்துக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

 அயலக திமுக

அயலக திமுக

அயலக திமுக சார்பில் குவைத்தில் நடைபெற்ற அக்கட்சியின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள சென்ற திமுக அயலக அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா, வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று, குவைத்திற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் மற்றும் தூதரக அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ்

இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ்


இந்தச் சந்திப்பின் போது குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் மேம்பாடு தொடர்பாகவும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதித்தனர். அப்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழர்களின் நலனுக்காக தன்னை அதிகம் முறை தொடர்பு கொண்ட உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா என்று தெரிவித்தார் இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ்.

 காலாநிதி வீராசாமி

காலாநிதி வீராசாமி

இதேபோல் நாடாளுமன்றத்தில் அதிக விவாதங்களில் கலந்து கொண்டதற்காக குவைத்தில் உள்ள இந்திய தூதாரகம் சார்பில் தமது வாழ்த்துகளை அப்துல்லாவுக்கு தெரிவித்துக் கொள்வதாக சிபி ஜார்ஜ் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் எழுதியது குறித்து மக்களவை உறுப்பினர் காலாநிதி வீராசாமி அந்த நிகழ்வில் பேசினார்.

குவைத் வாழ் தமிழர்கள்

குவைத் வாழ் தமிழர்கள்

இந்த நிகழ்வின் போது நடைபெற்றச் சந்திப்பில் குவைத் வாழ் தமிழக தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான பிஎம். இப்ராகிம், அயலக திமுக- குவைத் நிர்வாகிகள் சிதம்பரம் தியாகராஜன், புதுக்கோட்டை பஷீர் மற்றும் முஸ்தபா உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+