For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவை வைத்துக் கொண்டே.. சீனாவிற்கு "கண்டிஷன்" போடும் இந்தியா.. நடந்து முடிந்த மீட்டிங்

ரஷ்யாவில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ சந்திப்பு நடத்த உள்ளனர்.

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ சந்திப்பு நடத்தி உள்ளனர்.

இந்தியா - சீனா இடையிலான மோதல் மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது. இரண்டு நாட்டு பிரச்சனை தற்போது உலக பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய - சீன மோதலுக்கு இடையே ரஷ்யாவில் நடக்கும் 8 நாடுகளின் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே கூட்டங்கள் நடந்து வருகிறது. ரஷ்யா தலைமையிலான எஸ்சிஓ எனப்படும் ஷாங்காய் கோஆப்ரேஷன் ஆர்கனைசேஷன் சார்பாக இந்த கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உள்ளார்.

ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார் ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார்

மீட்டிங்

மீட்டிங்

இந்த நிலையில் ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியறவுத்துறை அமைச்சர் வாங்க் இ சந்திப்பு நடந்தது.. எல்லையில் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. முன்னதாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடந்தது.

இந்தியா கோரிக்கை

இந்தியா கோரிக்கை

ரஷ்யாவில் நடந்த இந்த மீட்டிங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கியமான கண்டிஷன்களை வைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக கடந்த ஜூலை 6ம் தேதி செய்யப்பட்ட பேச்சுவார்த்தையின்படி எல்லையில் அனைத்து இடங்களில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்க வேண்டும். பாங்காங் திசோவில் சீனா பிங்கர் பகுதி 4ல் குவித்து இருந்த படைகளை வாபஸ் வாங்க வேண்டும். டென்ட்களை நீக்க வேண்டும், ஆயுதங்களை எடுத்து செல்ல வேண்டும் என்று கூறியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மதிக்க வேண்டும்

மதிக்க வேண்டும்

எல்லையில் 2 கிமீ தூரத்திற்கு படைகளை குவிக்க கூடாது என்று கூறி இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு பக்கம் வேறு ஒரு முக்கியமான கண்டிஷனையும் அவர் போட்டிருக்கலாம் என்கிறார்கள். அதன்படி எல்லையில் அமைதி திரும்பும் வரை மற்ற பொருளாதார ரீதியான உறவில் சுமுக தீர்வு ஏற்படாது என்று கூறியிருக்கலாம். அதாவது ஒருபக்கம் எல்லையில் மோதிவிட்டு, இந்தியாவுடன் இன்னொரு பக்கம் பொருளாதார உறவை வைக்கலாம் என்று நினைக்க வேண்டாம் என்று கூறி இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா தடை

இந்தியா தடை

சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்யப்பட்ட நிலையில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். நேற்றை மீட்டிங்கை பொறுத்தே முடிவுகள் தெரிய வரும்.

ரஷ்யா எப்படி

ரஷ்யா எப்படி

இந்த மீட்டிங் முழுக்க ரஷ்யாவின் முன்னிலையில் நடந்துள்ளது. இரண்டு நாடுகளையும் சமாதானம் செய்ய ரஷ்யா முயன்று வருகிறது. சீனா இது தொடர்பாக ரஷ்யாவிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. நாங்கள் தானாக இந்த மத்தியசம் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவில்லை. கோரிக்கையின் அடிப்படையிலேயே இதை செய்கிறோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. இதனால் ரஷ்யா மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க சீனா நினைக்கிறது என்கிறார்கள்.

English summary
Indian foreign min to meet Chinese counterpart today on his 4-day trip Russia for SCO meet .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X