15 வயது இந்திய சிறுமிக்கு மாரடைப்பு.. கடலில் குளித்த போது திடீர் மரணம்.. சவூதியில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: கடலில் குளித்து விளையாடிய 15 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி, சவுதி அரேபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழவந்த சிறுமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவராகும்.

இந்த சம்பவம் சவுதியின் அல்கோபார் நகரிலுள்ள ஹால்ப் மூன் பீச்சில் நடந்துள்ளது. புகழ் பெற்ற இந்த கடற்கரையில் கடந்த 30ம் தேதி குடும்பத்தோடு குதுகலிக்க வந்துள்ளார் பர்வேஸ் அலி. உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்ப்பூர் பகுதியை சேர்ந்த இவர் 20 வருடங்கள் முன்பே சவுதியில் செட்டில் ஆனவர்.

Indian Girl Dies of Heart Attack at Half Moon Beach in Saudi Arabia

கடற்கரையில் இவரது 15 வயது மகள், சஹர் குளித்துக்கொண்டிருந்தார். இவர் சவுதியிலுள்ள டம்மாம் சிட்டி, இந்திய இன்டர்நேஷனல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியாகும்.

கடலில் குளித்தபோது அவருக்கு உடல்நிலையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால், வெளியே வந்து அவரது தாயை அழைத்துள்ளார். தாய் அருகே செல்லும் முன்பாக அந்த சிறுமி மயங்கி சாய்ந்துள்ளார். உடனடியாக அவர் கிங் பக்த் மெடிக்கல் சிட்டி மருத்துவமனைக்கு கொணண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அதறர்குள்ளாக சஹர் மரணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடல் தண்ணீரில் விஷபாம்பு கடித்து சஹர் இறந்துவிட்டதாக சவுதி அரேபிய சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால், பர்வேஸ் அலியோ, சஹர் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 15-year-old Indian girl has died of a heart attack while playing at the popular Half Moon beach in Al-Khobar city of Saudi Arabia.
Please Wait while comments are loading...