பிரதமருக்கு எதிர்ப்பு.. ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஷியா தலைவரின் ஆதரவாளர்கள் போராட்டம்
ஈராக்: ஈராக்கின் பிரதமராக முகமது அல் சூடானி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் நுழைந்து ஆக்கிரமித்து சபாநாயகர் மேஜையில் படுத்தும், நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஈராக்கில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்த ஷியா தலைவர் முக்தாதா அல்சதர் தலைமையில் தேசியவாத சேரூன் கூட்டணியும் போட்டியிட்டது.
இந்த கூட்டணி வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டன. அதன்படி முக்தாதா அல் சதர் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் பிரதமர் வேட்பாளர் தேர்வில் கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது.

புதிய பிரதமர் தேர்வு
இதனால் இடைக்கால பிரதமராக முஸ்தபா அல் காதிமி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் புதிய பிரதமர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முகமது அல் சூடானி என்பவர் பிரதமர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் பிரதமராக தேர்வாகலாம் என கூறப்படுகிறது. இதற்கு முக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் முற்றுகை
இந்நிலையில் முகது அல் சூடானிக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்ததா அல் சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இவரது ஆதரவாளர்கள் திடீரென்று பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டியடித்தனர்.

நாடாளுமன்றத்தில் குடியேற்றம்
இருப்பினும் ஏராளமான போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தனர். மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் மேஜைகளில் படுத்து கிடந்தனர். மேலும் பலர் நாடாளுமன்ற வளாகத்தில் நடனமாடினர். இதுதொடர்பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்படி பிரதமர் முஸ்தபா அல்காதிமி கூறியுள்ளார்.மேலும் பாதுகாப்பு படையில் பலமணி நேரம் போராடி நாடாளுமன்றத்தில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றினர்.

வெளியேற்றம்
இருப்பினும் அங்கு தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வருகிறது. ஈராக் எண்ணெய் வளமிக்க நாடாக இருந்தாலும் கூட அடிக்கடி அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தான் தற்போது அரசியல் நெருக்கடி உள்ளது. ஊழல், வேலையின்மை பிரச்சனை உள்ளது. மேலும் அரசின் சேவை நடவடிக்கைகளின் குறைபாட்டால் மக்கள் கோபத்தில் உள்ளனர். முன்னதாக கடந்த 2016ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கடந்த 2019ல் மக்கள் போராட்டம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications