For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணையப் புற்றுநோய்க்கு சிறுநீர் பரிசோதனையே போதும்- புதிய ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: கணையப் புற்றுநோயை உறுதிப்படுத்துவதற்காக புற்று நோய் பாதித்த தசைப்பகுதியை சீவி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பும் சிக்கலான "பயாப்சி" முறைக்கு பதிலாக, எளிமையான முறையில் சிறுநீர் பரிசோதனை மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும் என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் ஆண்டுக்கு 9000 பேர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்துவருகிறது.

இவர்களில் 3 சதவிகிதத்தினரே ஐந்து ஆண்டுகளாவது வாழ்கின்றனர்.

சிகிச்சைகள் உண்டு:

சிகிச்சைகள் உண்டு:

அதற்குள் அவர்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அதிகம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுகின்றனர். அதேபோல், விதைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 97 சதவிகிதம் பேரின் உயிர் காக்கப்படுகின்றது.

சிறுநீர் பரிசோதனை போதும்:

சிறுநீர் பரிசோதனை போதும்:

இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆராய்ச்சியில் "சிறுநீர்" பரிசோதனையின் மூலமாகவே இந்தப் புற்றுநோயை அறிய முடியும் என்று சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று வகை புரதங்கள்:

மூன்று வகை புரதங்கள்:

சிறுநீரில் உள்ள மூன்று வகையான புரதங்களை பரிசோதனை செய்தாலே நோயாளி கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளாரா, அல்லது கணைய புற்றுநோயா என்பதையும் பிரித்தறிய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நோயின் அறிகுறிகள்:

நோயின் அறிகுறிகள்:

இந்த நோயின் அறிகுறியாக முதுகுவலியும், மஞ்சள் காமாலை மற்றும் உடல் எடை குறைவது ஆகியவை ஏற்படலாம். இது மிகச்சாதாரணமாக வேறு எந்த நோய்க்கு வேண்டுமானாலும் அறிகுறியாக தவறாக புரிந்துகொள்ளப்படலாம். இதுதான் இந்த புற்றுநோய் தீவிரமடைய காரணியாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

50 வயதுக்கு மேல் கன்பார்ம் வாய்ப்பு:

50 வயதுக்கு மேல் கன்பார்ம் வாய்ப்பு:

இந்த புற்றுநோய் புகைபிடிப்பவர்களுக்கோ, 50 வயதுக்கு மேற்பட்ட உடல் பருமன் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கோ பொதுவாக வரலாம்.

நீரிழிவுக்காரர்களுக்கும் சான்ஸ் உண்டு:

நீரிழிவுக்காரர்களுக்கும் சான்ஸ் உண்டு:

சமீபத்தில் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் இது வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த நோய் பாதிப்பால்தான் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Scientists may some day predict lung cancer risk by examining the telomeres that protect your DNA.Telomeres are protective caps of DNA that prevent damage to the ends of chromosomes. Telomere length naturally shortens with cell division.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X