For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 200 பெண் எம்பிக்கள் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 200 பெண்கள் எம்பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி உள்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு 200 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 315 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 261இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 326 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்ற நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போதிய இடங்களில் வெற்றி பெறாதது பிரதமர் தெராசா மேவிற்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.

எதிர்காலம் கேள்விக்குறி

எதிர்காலம் கேள்விக்குறி

கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் வடக்கு அயர்லாந்து ஜனநாயக யூனியன் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஆட்சி அமைத்தாலும், அரசியலில் தெரசாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கூட்டணி ஆட்சி

கூட்டணி ஆட்சி

பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெரிமி கேட்டுக் கொண்டாலும், செய்ய மாட்டேன் என்று பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவர் ஹம்சா யூசப், தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம். பிரச்சனைகள் அடிப்படையில் கூட்டணி அரசுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் என்று தெரிவித்துள்ளார் இதன்படி இங்கிலாந்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

வலுவான எதிர்கட்சி

வலுவான எதிர்கட்சி

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது கன்சர்வேடிவ் கட்சி இந்த முறை 12 இடங்களை இழந்துள்ளது. தொழிலாளர் கட்சி 31 இடங்களை அதிகம் கைப்பற்றியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க தொழிலாளர் கட்சி தயாராக இல்லை. தொடர்ந்து நாட்டுக்காக பணியாற்றுவோம் என்று அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜெரிமி கார்பைன் அறிவித்துள்ளார்.

200 பெண் வேட்பாளர்கள் வெற்றி

200 பெண் வேட்பாளர்கள் வெற்றி

இந்த முறை 650 தொகுதிகளில் 200 போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்களாக நுழைகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் 191 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கடந்த 1918ல், போட்டியிட்ட மொத்தம் 707 வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The 2017 intake has now surpassed 200, outnumbering the 196 women elected to the House of Commons in the last Parliament after the 2015 election and subsequent byelections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X