For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா பக்கம் டூர் போய்விடாதீர்கள்.. ரஷ்ய எச்சரிக்கையால் கோவா சுற்றுலாவுக்கு பெரும் அடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

மாஸ்கோ: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என்று தனது நாட்டு மக்களுக்கு ரஷ்யா அறிவித்துள்ளது, கோவா சுற்றுலாவில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

சிரியா நாட்டு எல்லையில், ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள சுற்றுலா பயணிகளை உடனே தாயகம் திரும்ப ரஷ்யா அழைப்புவிடுத்துள்ளது.

இந்நிலையில், உலகின் பல பகுதிகளிலும், ரஷ்யர்கள் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களை அந்த நாட்டு, தகவல் மையம் வெளியிட்டுள்ளது. அம்மையத்தின் தலைவர் எகடெரினா பெல்யகோவா கூறியது: ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி, கோவாவும் ரஷ்ய பயணிகளுக்கு பாதுகாப்பான இடமில்லை என முடிவு செய்துள்ளோம்.

சீனா, வியட்னாம் ஓ.கே

சீனா, வியட்னாம் ஓ.கே

அதேநேரம், கியூபா, தெற்கு சீனா மற்றும் தெற்கு வியட்னாமுக்கு டூர் செல்லுமாறு ரஷ்யர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு மட்டுமின்றி, கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது.

கசப்பு சம்பவங்கள்

கசப்பு சம்பவங்கள்

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை மட்டுமே கருதாமல், சுற்றுலா பயணிகளுக்கு நிகழ்ந்த, சில உள்ளூர் சம்பவங்களையும் வைத்தும், இந்த முடிவை அறிவித்துள்ளோம். இவவ்வாறு அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் இந்த முடிவால் கோவா சுற்றுலாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாதி பேர் ரஷ்யர்கள்

பாதி பேர் ரஷ்யர்கள்

2002க்கு பிறகு கோவா வரும் ரஷ்யர்கள் எண்ணிக்கை அதிகம், சுமார் 50 சதவீத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரஷ்யர்களே. 2013ல், கோவா வந்த ரஷ்யர்கள் எண்ணிக்கை இரண்டரை லட்சமாம். இந்த சுற்றுலா பயணிகள் வருகை தடைபட்டால் அது கோவா பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாமீது அதிருப்தி?

இந்தியாமீது அதிருப்தி?

பல விவகாரங்களிலும், இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவவது ரஷ்யாவுக்கு அதிருப்தியை ஏர்படுத்தியுள்ள நிலையிலும், டூரிஸ்ட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

English summary
Russian President Vladimir Putin had cancelled all the flights heading towards Egypt after the explosion of a Russian passenger plane over the Sinai peminsula.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X