For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டாமை.. அந்த நத்தை முதல்ல வந்துச்சா.. இல்லை இது முதல்ல வந்துச்சா.. தீர்ப்பை பார்த்துச் சொல்லு

Google Oneindia Tamil News

லண்டன்: உலகிலேயே (அது இல்லைங்க.. இது வேற) நத்தைகளுக்காக பந்தயம் நடத்தும் ஒரே இடம்.. நம்ம இங்கிலாந்தின் கான்காம் கிராமம்தான். சாதா போட்டி கிடையாது பாஸ்.. செம ஜாலியான நத்தைகளின் ஓட்டப் போட்டி இது.

ஊர் மந்தையில் (அதாவது ஒரு பார்க்கில்) பெரிய டேபிளைப் போட்டு அதில் நத்தைகளை ஏற்றி அதன் ஓட்ட வித்தையை ஊரே கூடி வேடிக்கை பார்த்து மகிழ்கிறது இந்த கான்காம் கிராமத்தில்.

உலக நத்தை ஓட்டம்

உலக நத்தை ஓட்டம்

உலக நத்தை ஓட்ட சாம்பியன்ஷிப் என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி 40 வருடமாக நடக்கிறது என்பதுதான் அட போடும் வைக்கும் செய்தியாக இருக்கிறது.

கிழக்கு இங்கிலாந்தில்

கிழக்கு இங்கிலாந்தில்

கிழக்கு இங்கிலாந்தில் உள்ளது இந்த கான்காம் கிராமம். இங்கு நடைபெறும் போட்டியில் நத்தைகள் பலவற்றுடன் மக்கள் படையெடுத்து வருகின்றனர் பங்கேற்க.

படா தமாஷ் போங்கோ

படா தமாஷ் போங்கோ

உலகிலேயே மிகவும் மெதுவாக நகரும் உயிரினம் நத்தைதான். ஆனால் அவை சேர்ந்து ஓட்டப் போட்டியில் பங்கேற்றால் எப்படி இருக்கும்.. அப்படித்தான் இந்த ஓட்டப் போட்டியும் செம தமாஷாக இருக்கிறது.

13 இன்ச்தான் பாஸ்

13 இன்ச்தான் பாஸ்

போட்டி விதிமுறைகள் ரொம்ப ரொம்ப சிம்பிள் பாஸ். டேபிளுக்கு மேலே நத்தைகளை ரவுண்டாக வரிசை கட்டி இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நத்தைகள் 13 இன்ச் தூரத்தை தொட்டு கடக்க வேண்டும். எந்த நத்தை முதலில் தொடுகிறதோ அதுதான் சாம்பியன்.

சாம்பியன் ஆன ஜார்ஜ்

சாம்பியன் ஆன ஜார்ஜ்

இந்த ஆண்டு நடந்த போட்டியில் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்ட நத்தை 175 போட்டி நத்தைகளைத் தோற்கடித்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

ஜஸ்ட் மிஸ்

ஜஸ்ட் மிஸ்

இந்த நத்தையானது போட்டி தூரத்தை 2 நிமிடம் 40 விநாடிகளில் தொட்டு வென்றது. இன்னும் 20 விநாடிகள் குறைந்திருந்தால் இது உலக சாதனை படைத்திருக்குமாம். ஜஸ்ட் மிஸ் ஆகிப் போச்சு!

அடுத்து வாட்டி கொஞ்சம் வேகமாக நடந்து போங்க ஜார்ஜு!

English summary
Snails might be one of the slowest creatures on the planet, but they can entertain a crowd. The village of Congham in eastern England has been home to the World Snail-Racing Championships for more than 40 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X