For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பறக்கும் விமானத்தில் நடந்த உவ்வே சம்பவம்! சாப்பாட்டு தட்டில் கிடந்த ‘பாம்பு தலை’.! மிரண்டு போன பயணி!

Google Oneindia Tamil News

இஸ்தான்புல் : துருக்கி நாட்டில் இருந்து ஜெர்மனிக்குச் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேட்டரிங் நிறுவனத்தை ரத்து செய்து இருப்பதாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    சாப்பாட்டு தட்டில் கிடந்த ‘பாம்பு தலை’.! மிரண்டு போன பயணி!

    உள்நாட்டு விமானங்களைத் தவிர நீண்ட தூரம் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனங்களை சார்பில் உணவு வகைகள் குளிர்பானங்கள் மற்றும் மது வகைகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இதற்கான கட்டணம் விமான டிக்கெட்டின் ஒரு பகுதியாக வசூலிக்கப்படுகிறது பெரும்பாலும் பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போது சுவை மொட்டுகள் செயல்படாது என்பதால் உணவுகளின் சுவையை அறிய முடியாது.

    எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பறந்த சீன போர் விமானம்..திடீர் பதற்றம்.. பதிலடிக்கு தயாராகும் ரஃபேல் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பறந்த சீன போர் விமானம்..திடீர் பதற்றம்.. பதிலடிக்கு தயாராகும் ரஃபேல்

    சன் எக்ஸ்பிரஸ்

    சன் எக்ஸ்பிரஸ்

    அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்த புகார்கள் இணையத்தில் மிக வேகமாக கவனம் பெற்று வருகிறது இந்த நிலையில் தான் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற விமானத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்த புகார் தான் தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

    பாம்பு தலை

    பாம்பு தலை

    துருக்கியின் அங்காராவில் இருந்து ஜெர்மனி நாட்டின் டஸ்ஸல்டார்வ் நகருக்கு கடந்த 21ஆம் தேதி சன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று இயக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அங்கிருந்த பயணிகளுக்கு காலை டிபன் விமான பணியாளர்களால் வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவை முக்கால்வாசி சாப்பிட்ட நிலையில் தான் அவர் கண்ட காட்சி தலைசுற்ற வைத்துள்ளது. அதாவது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் பெரும்பாதியை சாப்பிட்டுவிட்ட நிலையில் அதன் அடியில் ஒரு பாம்பின் வெட்டப்பட்ட தலை இருந்தது.

    மயங்கிய பயணிகள்

    மயங்கிய பயணிகள்

    இதனைக் கண்ட அந்த பயணி பயத்தில் கூச்சலிட்டதோடு வாந்தி எடுத்து மயங்கி சரிந்து உள்ளார். மேலும் இதனைக் கண்ட மற்ற பயணிகளும் தங்கள் உணவை தூக்கி எறிந்ததோடு சிலர் வாந்தி எடுத்து மயங்கினர். இதை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் முதலுதவி வழங்கப்பட்டது. இந்நிலையை பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு இருந்த சம்பவம் குறித்து உணவு தயாரித்து வழங்கும் நிறுவனத்திடம் விமான நிறுவனம் புகார் அளித்தது.

    சன் எக்ஸ்பிரஸ் விளக்கம்

    சன் எக்ஸ்பிரஸ் விளக்கம்

    இந்த நிலையில் சாப்பாட்டு தட்டில் பாம்பு தலை இருக்கும் வீடியோவானது ட்விட்டரில் வெளியிடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக சன் எக்ஸ்பிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

    ஒப்பந்தம் ரத்து

    ஒப்பந்தம் ரத்து

    இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை இருந்தது மிகவும் துரதிஷ்டமான சம்பவம். இதற்காக எங்கள் பயணிகளிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்னர் நடந்தது கிடையாது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவது எங்கள் நோக்கம். சாப்பாட்டில் பாம்பு தலை இருந்ததற்காக உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

    English summary
    The airline has canceled the catering service after the incident of snake head in the food served to the passenger on the Sun Express flight from Turkey to Germany caused a great shock.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X