Taliban: மனைவியை கணவர்கள் அடிப்பது தப்பு இல்லை.. சட்டப்பூர்வமாக்கும் தாலிபான்கள்!
காபூல்: குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற ஆப்கானிஸ்தானில் புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே அங்கு கடுமையான சட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மனைவியை கணவர்கள் அடிக்கலாம்
குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதிலும் பெண்கள் உயர் கல்வி கற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், கணவன்மார்கள் மனைவியை வீட்டில் அடிப்பது சட்டப்பூர்வமாக்கியுள்ளது தாலிபான் அரசு.
குடும்ப சண்டையின் பொது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம் என்றும், ஆனால் எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவுக்கோ தாக்கக் கூடாது என்ற புதிய சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்து இஸ்லாமிய அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்
ஒருவேளை மனைவியை அடித்ததில் அவருக்கு கண்ணுக்கு தெரியும் படியான காயங்கள் ஏற்பட்டு இருந்தால் கணவன்களுக்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுமாம். அதேநேரத்தில் தனக்கு எதிராக துன்புறுத்தல் நடைபெற்றது என்பதை பெண்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
தனது உடலில் காயம் ஏற்பட்ட இடத்தை மட்டும் நீதிபதியிடம் பெண்கள் காட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறதாம். தனது உடலில் மீதமுள்ள பகுதியை முழுவதும் ஆடையால் மறைத்துவிட்டு காயம் ஏற்பட்ட இடத்தை மட்டுமே காட்ட வேண்டும் எனவும், அந்த நேரத்தில் தனது கணவர் அல்லது ஆண் துணை ஒருவர் நீதிமன்றத்தில் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மனைவி எங்கும் செல்லக்கூடாது
அதேபோல, தனது கணவரின் அனுமதி இல்லாமல் உறவினர் வீட்டிற்கு மனைவி சென்றால் அந்த பெண்ணிற்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம், வன்முறையாளர்களுக்கு குறைந்த தண்டனையையும், பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து பாலின சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சட்டத்தின் 9 ஆம் பிரிவின்படி, ஆப்கானிஸ்தான் சமூகம் மத அறிஞர்கள் (உலமாக்கள்), உயரடுக்கு (அஷ்ரஃப்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கான தண்டனை, குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்தல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் சமூக அந்தஸ்தைப் பொறுத்தே இது தீர்மானிக்கப்படும்.
மனித உரிமை குழு முடிவு
புதிய சட்டம் தொடர்பாக விவாதிப்பது கூட குற்றம் என்று என்று கூறப்பட்டுள்ளதால், புதிய சட்டம் பற்றி விவாதிக்கவே மனித உரிமை குழுவை சேர்ந்தவர்களும் அஞ்சுகிறார்களாம். ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பான ரவாதரி (Rawadari), "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அது நடைமுறைக்கு வராமல் தடுக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையையும் பிற சர்வதேச அமைப்புகளையும் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications