ரூ9,000 கோடி வங்கி கடன்களை கட்டாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா இங்கிலாந்தில் அதிரடி கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் மல்லையாவை ஸ்காட்லார்ந்து யார்டு போலீஸ் கைது செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜய் மல்லையா. மதுபான தொழில் மற்றும் விமான சேவைகளில் விஜய் மல்லையா நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.

Vijay Mallya arrested in London

தங்களது நிறுவனங்கள் பெயரால் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ரூ9,000 கோடி கடன்களைப் பெற்றார். வங்கிகளும் மல்லையாவுக்கு சளைக்காமல் கடன்களைக் கொடுத்தன.

ஆனால் மல்லையா வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை வந்தார் மல்லையா.

இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற கதவுகளைத் தட்டின. இதையடுத்து மல்லையாவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன.

தற்போது இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Liquor baron Vijay Mallya has been arrested in London. He was arrested this morning.
Please Wait while comments are loading...