முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரி வருகை.. நாளை முதல் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், கருணாநிதி சிலை மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை அவர் திறந்து வைக்கிறார், மேலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "முதல்வர் கான்வாய் செல்லும் நேரங்களில் மட்டும் கொட்டாரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மகாதானபுரம் ரவுண்டானா, முருங்கன்குன்றம் வழியாக காட்மல் மாதா திருப்பம், தெற்கு குண்டல், விவேகானந்தபுரம், சர்ச் ரோடு வழியாக கன்னியாகுமரி ரதவீதி நோக்கி அனுமதிக்கப்படும்.
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இருந்து ரவுண்டானாவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. மாதவபுரம், விவேகானந்தபுரம், சர்ச் ரோட்டில் இருந்து கன்னியாகுமரி வரும் அனைத்து வாகனங்களும் கன்னியாகுமரி ரத வீதி நோக்கி அனுமதிக்கப்படும். கோவளத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சிலுவை நகர் வழியாக கடற்கரை ரோட்டில் அனுமதிக்கப்படும்.
பறக்கை விலக்கில் இருந்து தேங்கம்புதூர் வழியாக மணக்குடி நோக்கி வரும் வாகனங்கள் பறக்கை விலக்கில் இருந்து இடலாக்குடி, ஆசிரமம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைக்குளம், ஆண்டிவிளை, முகிலன் குடியிருப்பு வழியாக மணக்குடி நோக்கி அனுப்பிவைக்கப்படும். மணக்குடியில் இருந்து புத்தளம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கீழ மணக்குடியில் இருந்து கடற்கரைச் சாலை வழியாக தெற்கு தேரியினை நோக்கிச் சென்று புத்தளம் செல்ல வேண்டும். மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு தேரியினையில் கடற்கரைச் சாலை வழியாக மணக்குடி நோக்கி அனுப்பிவைக்கப்படும்.
அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் கம்பளம் சந்திப்பு, சுழக்கடை பஜார், ரயில் நிலையம், நாயுடு ஆஸ்பத்திரி, இடலாக்குடி வழியாக செல்ல வேண்டும். நாயுடு ஆஸ்பத்திரி சந்திப்பில் இருந்து ஈத்தாமொழி விலக்கு வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இடலாக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் ரயில்வே ரோடு வழியாக செல்ல வேண்டும். பீச் ரோட்டில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் இருளப்பபுரம் வழியாகவும், இருளப்பபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆயுதப்படை மைதான சாலை வழியாகவும் செல்ல வேண்டும்.
தலைமை தபால் நிலையம், மணிமேடை சந்திப்பு வழியாக வரும் வாகனங்கள் வேப்பமூடு பூங்கா, கோர்ட் ரோட்டில் செல்ல அனுமதியில்லை. மாறாக வாகனங்கள் அனைத்தும் அண்ணா பஸ் நிலையம், கோட்டார் போலீஸ் நிலையம் சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். செட்டிகுளத்திலிருந்து வரும் வாகனங்கள் ராமன்புதூர், கோணம் ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம் வழித்தடத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெரிக் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் வாட்டர் டேங்க் ரோடு, பால்பண்ணை ரோடு, கிறிஸ்து நகர் வெட்டூர்ணிமடம் வழியாக வடசேரி பாதையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதேபோல நாளை மறுநாள் (புதன்கிழமை) கான்வாய் செல்லும் நேரங்களில் தக்கலை, தோட்டியோடு வழியாக பார்வதிபுரம் வரும் வாகனங்கள் அனைத்தும் பார்வதிபுரம் மேம்பாலம் கீழ் வழியாக டெரிக் செல்ல அனுமதியில்லை. மாறாக வெட்டூர்ணிமடம் வடசேரி நோக்கி செல்ல வேண்டும். குருந்தன்கோடு, பேயோடு, ராஜாக்கமங்கலம் வழியாக வரும் வாகனங்கள் பெருவிளை பார்வதிபுரம் வழியாக மாநகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும். இதேபோல 2 நாட்களும் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications