ரூ.31 லட்சம் தட்டில் வைத்து தரப்பட்ட வரதட்சணை.. 1 ரூபாய் மட்டும் எடுத்த மணமகன்.. நெகிழ்ச்சி சம்பவம்
லக்னோ: வரதட்சணை பெறுவதும், தருவதும் குற்றம் என்றாலும், தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும் , வரட்சணைகள் தலைதூக்கி வருகின்றன. அத்துடன் வாழ வேண்டும் என்ற கனவில் காத்திருக்கும் எத்தனையோ இளம் பெண்களையும் இந்த வரதட்சணை காவு வாங்கிவிடுகின்றன.. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
வரட்சணைகளால் வன்முறை சம்பவங்கள் மனித இழப்பு வரை நடந்து விடுகிறது.. தமிழகம், தென்மாநிலம் மட்டுமல்லாமல், வடமாநிலங்களிலும் இந்த வரதட்சணை கொடுமை விதிவிலக்கல்ல..

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகள் வரதட்சணை தரவில்லை என்பதற்காக, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஊசியை செலுத்தியிருக்கிறார் மாமியார்.. இதனால் உடம்பில் தொற்று பரவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அந்த அப்பாவி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலைமை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
மனிதநேய மனிதன்
இந்த கொடூரம் நடந்த அதே உத்தரப்பிரதேசத்தில்தான், மனிதநேயமுள்ள இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போது ஒரு சம்பவம் புரிய வைத்துள்ளது.
மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை பணம் ரூ.31 லட்சத்தை மணமகன், தனக்கு வேண்டாம் என்று சொல்லி திருப்பி தந்துவிட்டாராம்.. இந்த சம்பவம்தான் இன்று டாக் ஆஃப் தி நேஷனாக பாராட்டப்பட்டு வருகிறது..!
முஜாபர்நகர் அருகில் உள்ளது நக்வா என்ற கிராமம்.. அங்கு வசித்து வரும் அவதேஷ் என்ற இளைஞருக்கு அதிதி சிங் என்ற பெண்ணை பார்த்து பேசி, திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.. கொரோனா நோயில் தன்னுடைய அப்பாவை இழந்தவர் இந்த மணமகள் அதிதி சிங்..
ரூ.31 லட்சம்
இவரைதான் அவதேஷிற்கு பேசி முடித்திருந்தனர்.. திருமணமும் தடபுடலாக நடந்தது.. திருமண நாளில் பெண் வீட்டினர் வரதட்சணையாக ரூ.31 லட்சத்தை தட்டில் வைத்து மணமகனிடம் தந்திருக்கிறார்கள்.. அதாவது 10 லட்ச ரூபாய் ரொக்கம், 21 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் ஆகியவற்றை வரதட்சணையாக தந்தனர்.
இந்த வரட்சணை பணத்தை தரும்போது, இரு தரப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் அங்கே கூடியிருந்தனர்.. அவர்கள் முன்னிலையில்தான் வரதட்சணை பணம் மாப்பிள்ளைக்கு தரப்பட்டது.
வரதட்சணைக்கு எதிரான கொள்கை
ஆனால் அந்த பணத்தை மணமகன் வாங்கவில்லை.. தந்தையை இழந்த பெண்ணுக்கு, இவ்வளவு பெரிய தொகையை கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.. ஆனால், எனக்கு இந்த பணம் வேண்டாம்.. இந்த பணத்தில் எனக்கு எந்த உரிமையும் கிடையாது.. இது உங்களது இறந்த தந்தையின் கடின உழைப்பில் வந்தது.. அதை எப்படி நான் ஏற்றுக் கொள்வேன்? எனக்கு இப்பணம் வேண்டாம். வரதட்சணைக்கு எதிரான நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று சொல்லி திருப்பி தந்துவிட்டார்.
சாதாரண ஏழை குடும்பத்தில்கூட, பெண்ணுக்கு வரதட்சணை கொடுப்பார்கள்.. அதிலும் வடமாநிலங்களில் திருமண நாளில் பணம் கொடுப்பது பாரம்பரியமான விஷயமாகவும் கருதப்படுகிறது.. அப்படியிருந்தும் மணமகன் வரதட்சணையை வேண்டாம் என்று சொன்னதுமே, மொத்த மண்டபமும் ஆச்சரியத்தில் உறைந்தது..
பெண் வீட்டினருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. எனினும், பாரம்பரியம், சம்பிரதாயம் என்பதற்காக 31 லட்சத்திலிருந்து 1 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டார்..
ரூ.31 லட்சம் அவதேஷ்
ரூ.31 லட்சம் அவதேஷ்.. தயவுசெய்து வாங்கிக்கோ என்று அவரது நண்பர்களும் கூறினார்கள்.. ஆனால், எதையுமே அவதேஷ் கண்டுக்கொள்ளவில்லை.மணப்பெண்ணின் கழுத்தில் மகிழ்ச்சியுடன் தாலி கட்டினார்... கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் மணமகனின் செயலுக்கு வாழ்த்து கூறினார்கள்..
திருமணம் முடிந்ததுமே, மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும், நெகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும், பெருத்த நம்பிக்கையுடனும் புதுவாழ்வை துவக்க மணமகனுடன் கிளம்பி சென்றார் மணமகள் அதிதி சிங்..!!
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications