அகிலேஷ் கட்சியில் ஹவுஸ்புல் ... அய்யா வாங்க.. அம்மா வாங்க..கட்சிகள், தலைவர்களிடம் கெஞ்சும் காங்.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க மறுத்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி. தேர்தல் களத்தில் பாஜக சிறிய ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ராஜ்பாரின் கட்சி, ஜெயந்த் சவுத்ரியின் ஆர்.எல்.டி. ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஜேடியூ தனித்தே போட்டியிடுகின்றன.

பீம் ஆர்மி ஆசாத்
இந்த நிலையில் லக்னோவில் அகிலேஷ் யாதவை அண்மையில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் சந்தித்து பேசினார். இதனையடுத்து தலித்துகள் தலைவரான சந்திரசேகர் ஆசாத், அகிலேஷுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு புஸ்வானமாகிப் போனது. அகிலேஷுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டார் சந்திரசேகர் ஆசாத்.

காங். பரிதாபம்
இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆள் பிடிக்கும் வேலைகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதான் உ.பி.யில் அக்கட்சியின் பிரசார பீரங்கியாக சுழன்று வருகிறார். ஆனால் தேர்தல் கருத்து கணிப்புகள் எதுவுமே காங்கிரஸுக்கு துளி சாதகமாகவும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்பதை திட்டவட்டமாகவே கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.

அய்யா வாங்க.. அம்மா வாங்க..
இந்த பின்னணியில் உ.பி. காங்கிரஸ் தலைவர் இர்ஷாத் உல்லா சமூக வலைதளங்களில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார். அதில், சமாஜ்வாதி கட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷுடன் செல்லாதவர்கள், தேர்தலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் காங்கிரஸுக்கு வரலாம். என்னுடைய வீடு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும் என கூறியுள்ளார்.

பிரியங்கா களத்தில் இருந்தும்
உத்தரப்பிரதேசத்தில் ஒரு காலகத்தில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் காலங்கள் உருண்டோட நேரு குடும்ப தொகுதிகளில் கூட செல்வாக்கை தொலைத்துவிட்டது காங்கிரஸ். கடந்த தேர்தலில் வெறும் 7 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. இதனை சரிகட்டத்தான் பிரியங்கா காந்தி களமிறங்கினார். ஆனாலும் பிரியங்கா வந்தாலும் காங்கிரஸ் தேறாத நிலையில்தான் காங். தலைவர்கள் இப்படியான கெஞ்சுதல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தோ பரிதாபம்!
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications