மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் கொள்கைகள் பிடிக்கவில்லை.. பிரச்சாரம் செய்யவில்லை… சு. சாமி பளீச்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் கொள்கைகள் பிடிக்கவில்லை.. பிரச்சாரம் செய்யவில்லை… சு. சாமி பளீச்-வீடியோ

    மதுரை: பாஜகவின் கொள்கைகள் பிடிக்காததால் பிரச்சாரம் செய்யவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விளக்கம் அளித்துள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: டி.டி.வி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்க மறுப்பது தவறு. ஒரே ஒரு இடைத்தேர்தலில் மட்டுமே அமமுக போட்டியிட்டுள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு பின்னர் டி.டி.வி தினகரன் கட்சிக்கு நிலையான சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    I did not like BJPs policies Says Senior leader Subramanian Swamy

    வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், VVPAT இயந்திரத்தில் பதிவான வாக்கு விவரங்களையும் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது.

    தான் 2004 ம் ஆண்டு மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட போது VVPAT இல்லாததால் 500 வாக்குச்சாவடியில் தமக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகாமல் முறைகேடு நடந்தது. தி.மு.க என்பது தில்லு முல்லு கழகம்.

    அய்யோ மோடி பேச போறாராம்.. அதான் நான் இப்பவே ஏடிஎம்-க்கு வந்துட்டேன்.. நெட்டிசன்கள் கிண்டல்அய்யோ மோடி பேச போறாராம்.. அதான் நான் இப்பவே ஏடிஎம்-க்கு வந்துட்டேன்.. நெட்டிசன்கள் கிண்டல்

    பாஜக தனித்து போட்டியிடுவதையே நான் விரும்பினேன். சீட்டுக்காகவே கூட்டணி; கொள்கைக்காக இல்லை. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவும், தி,மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க- பாஜக கூட்டணி சகோதர கூட்டணி ஒன்றும் இல்லை.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட மத்திய அரசு தயாராக இருந்த போது, அப்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெயர் சூட்ட வேண்டாம் என மறுத்து விட்டார்.

    அதே போல், 2005ம் ஆண்டு விமான நிலைய திறப்பு விழாவில், மத்திய அமைச்சர் முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பதற்கான அறிவிப்பை ப.சிதம்பரமும் தடுத்தார் என்றும் தெரிவித்தார்.

    English summary
    It is wrong to refuse to give a public symbol to the TTV Dinakaran says Senior leader Subramanian Swamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X