மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நிலைமை ரொம்ப மோசம்.. 50 டாக்டர்கள் உடனே தேவை.. அனுப்ப முடியுமா" கேரளாவிடம் உதவி கேட்ட மகாராஷ்டிரா

கேரள அரசுக்கு கடிதம் மூலம் மஹாராஷ்டிரா அரசு உதவி கேட்டுள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: "இங்கு நிலைமை மோசம்.. 50 டாக்டர்கள், 100 நர்சுகள் உடனடியாக தேவை.. எங்களுக்கு உதவ முடியுமா? அவர்களின் எல்லா செலவையும் நாங்களே பார்த்து கொள்கிறோம்" என்று கேரள அரசிடம் மகாராஷ்டிரா அரசு கொரோனா சிகிச்சைக்கான உதவியை கேட்டுள்ளது.

4வது லாக்டவுன் அமலில் இருந்தாலும், கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.. தொற்று பாதிப்பு ஒரு பக்கம், தளர்வுகள் மறுபக்கம் என இந்தியா பயணித்து வருகிறது.

இப்போதைக்கு பாதிப்பு எண்ணிக்கையானது 1,25,101 பேரிலிருந்து 1,31,868 பேராக அதிகரித்துள்ளது.. 54,441 பேர் குணமடைந்திருந்தாலும், உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 3,720-ல் இருந்து 3,867ஆக உயர்ந்துள்ளது.

"நிலைமை ரொம்ப மோசம்.. 100 டாக்டர்கள் உடனே தேவை.. அனுப்ப முடியுமா" கேரளாவிடம் உதவி கேட்ட மகாராஷ்டிரா

 உலுக்கி வருகிறது

உலுக்கி வருகிறது

இந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,767 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு வந்துள்ளது.. இந்த தகவல்கள் அனைத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனாவில் முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டி மாநிலம்தான்.

 மும்பை, புனே

மும்பை, புனே

அங்கு மட்டும் 50,000-தையும் தாண்டி பாதிப்பு உள்ளது மாநில மக்களுக்கு பீதியை தந்து வருகிறது.. தினந்தோறும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே வருகிறது. மும்பை, தாராவி இடங்களில் இந்தநிலை பற்றி சொல்லவே வேண்டாம்... நெரிசல் மிகுந்த பகுதிகள்.. தொற்றுக்கு வாய்ப்புகளும் அதிகம்.. மக்கள் தொகை அடர்த்தியும்கூட.

முயற்சிகள்

முயற்சிகள்

அதனால்தான் இந்த நகரங்களை ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதில் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. மஹாராஷ்டிர அரசும் என்னென்னவோ முயற்சிகளை விடாமல் எடுத்து கொண்டுள்ளது.. அந்த மாநிலத்தில் உள்ள எல்லா டாக்டர்களையும் இந்த கொரோனா பணியில் ஈடுபத்தியும் வருகிறது.. இவர்களை தவிர பிரைவேட் ஆஸ்பத்திரி டாக்டர்களையும் ஈடுபடுத்தியுள்ளது.. ஆனாலும் அந்த மாநிலத்துக்கு இன்னும் அதிகமாக டாக்டர்களும், நர்சுகளும் தேவைப்படுகிறார்கள்.. மும்பை, புனேயை சமாளிக்கவே தனி டீம் தேவைப்படுகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

அதனால் கேரள மாநிலத்திடம் மஹாராஷ்டிரா அரசு உதவி கேட்டுள்ளது. . நல்ல அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் 50 பேர், நர்ஸ்கள் 100 பேரை சிகிச்சைக்கு தங்கள் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறது.. எம்பிபிஎஸ் டாக்டர்களுக்கு ரூ.80,000 சம்பளம் தருகிறோம், எம்டி., எம்எஸ் டாக்டர்க
ளுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறோம், நர்ஸ்களுக்கு மாசம் ரூ.30,000 தருகிறோம், அவர்கள் தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு என எல்லா வசதிகளையும் நாங்களே பார்த்து கொள்கிறோம் என்று மஹாராஷ்டிரா அரசு உறுதி தந்துள்ளது.

 உத்தரவாதம்

உத்தரவாதம்

அவர்களுக்கு தேவையான மருந்துகள், பாதுகாப்பு டிரஸ்கள், உபகரணங்கள் போன்றவைகளையும் செய்து தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்துள்ளது. இதையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி, கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு மகாராஷ்டிர அரசு அனுப்பியுள்ளது.

டாக்டர்கள்

டாக்டர்கள்

இப்போதைக்கு கேரளாவிலும் பாதிப்புகள் தொடங்கி உள்ளது உண்மைதான் என்றாலும், மஹாராஷ்டிரா அளவுக்கு மோசம் இல்லை.. அதனால் எத்தனையோ மாநிலங்களுக்கு இதுவரை உதவி வந்துள்ள கேரளா, எப்படியும் இந்த முறையும் மஹாராஷ்டிராவுக்கு டாக்டர்களை அனுப்பி அங்குள்ள உயிர்களை காப்பாற்ற முயற்சிக்கும் என்றே நம்பப்படுகிறது.

English summary
coronavirus: maharastra requested kerala gov to provide doctors, and nursers for treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X