பீகார்: அமைச்சர் பதவிக்காக முட்டி மோதும் காங். எம்.எல்.ஏக்கள்.. டெல்லிக்கும் கோஷ்டிகளாக படையெடுப்பு
பாட்னா/டெல்லி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் எப்படியாவது இடம் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முட்டி மோதுகின்றனர். அமைச்சர் பதவியை பெறுவதற்காக டெல்லிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் படையெடுத்து உள்ளனராம்.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமாரும் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. பீகார் சட்டசபையில் வரும் 24-ந் தேதி நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. அதற்கு முன்னதாக அமைச்சர் பதவிகள் ஒதுக்கீட்டை அதிருப்தி இல்லாமல் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்ஜேடி, ஜேடியூ இரு கட்சிகளும் தலா 14 அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி வழங்கவும் முடிவு செய்துள்ளன.
பீகார் சட்டசபையில் காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 19 எம்.எல்.ஏக்களில் பலரும் எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் என்பதற்காக முட்டி மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சத்ரபதி யாதவ் என்ற எம்.எல்.ஏ, சோனியா காந்திக்கு அமைச்சர் பதவி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நான் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவன்; ஆகையால் என்னை கட்டாயம் அமைச்சராக்கித்தான் தீர வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார்.
பீகார் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் பக்தசரண் தாஸ், டெல்லியில் ஆலோசனை நடத்துவதற்காக சென்றுள்ளார். அதேபோல் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷ்டி கோஷ்டியாக டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். அடைந்தால் அமைச்சர் பதவிதான் என்ற சூளுரையோடு டெல்லிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் படையெடுத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் பீகாரில் புதிய ஆட்சி அமைய காரணமே சோனியா காந்திதான். ஆகையால் காங்கிரஸுக்கு கணிசமான எண்ணிக்கையில் அமைச்சர் பதவிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற குரலையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
பீகாரில் ஆட்சி அமையும் போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இப்படி கோதாவில் குதித்திருப்பதை பாஜக மவுனமாக ரசித்து வருகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications