Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது மணப்பெண் பெட் ரூமுக்குள் நுழைந்த போலீஸ்.. மயங்கி விழுந்த மாமியார்.. காரணத்தை கேட்டா ஆடிடுவீங்க!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஹாஜிபூர் சிட்டி என்ற பகுதியில் புதுமணப்பெண் படுக்கை அறையில் போலீசார் திடீரென ரெய்டு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் தற்போது முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால் இதையும் மீறி மக்கள் பல இடங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து வருகிறார்கள். அதேபோல் சில இடங்கள் அண்டை மாவட்டங்களில் இருந்து மதுபானம் கடத்தப்பட்டு வருகிறது.

பீகாரில் இது மிகப்பெரிய நிழல் உலகம் போலவே மாறி உள்ளது. இதை தடுக்க போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக ரெய்டு நடத்துவதும் வழக்கமாகி உள்ளது.

ரெய்டு

ரெய்டு

முக்கியமாக திருமண விழாக்களில் போலீசார் ரெய்டு நடத்துவது அதிகம் ஆகியுள்ளது. திருமணங்களில் ரகசியமாக மதுபானம் பயன்படுத்தப்படுவதாக வரும் தகவல்களை அடுத்து போலீசார் இப்படி ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக பீகாரில் ஹாஜிபூர் சிட்டி என்ற பகுதியில் ஷீலா தேவி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளார்.

படுக்கையறை

படுக்கையறை

அந்த வீட்டில் படுக்கையறையில் புதுமணப்பெண் பூஜா குமாரி இருந்துள்ளார். இவர் ஷீலாவின் மருமகள். பூஜாவிற்கு திருமணம் ஆகி 5 நாட்களே ஆகிறது. இங்கு போலீசார் ரெய்டு நடத்திய போது அங்கு கணவர் இல்லை. அதேபோல் பெண் போலீசாரும் இல்லை.

உள்ளே சென்று சோதனை

உள்ளே சென்று சோதனை

இப்படிப்பட்ட நிலையில் அந்த பெண் உள்ளே இருந்த போதே படுக்கையறைக்குள் புகுந்து போலீசார் மது பாட்டில் இருக்கிறதா என்று சோதனை செய்துள்ளனர். எல்லா துணிகளையும் வெளியே வீசிவிட்டு ரூம் முழுக்க சோதனை செய்துள்ளனர். குடும்பத்தினர் இந்த சம்பவத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட போலீசார் எதிர்ப்பை மீறி ரெய்டு நடத்தி உள்ளனர்.

மயக்கம்

மயக்கம்

இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாமியார் ஷீலா அங்கேயே மயங்கி விழுந்தார். எங்கள் வீட்டில் எங்கள் எதிர்ப்பை மீறி சோதனை நடத்தி உள்ளனர். இது மனிதத்தன்மையற்ற செயல். எங்கள் வீட்டில் மது பாட்டிலே இல்லை. பின்னர் ஏன் சோதனை நடத்தினார்கள்.

கோபம்

கோபம்

ஊர் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. போலீசார் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் வீட்டில் யாருமே மது குடிக்க மாட்டார்கள், என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். பீகார் போலீசார் இந்த சம்பவம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர். சமீபத்தில் பீகார் போலீஸ் இதேபோல் புதுமண தம்பி வீட்டில் பாட்னாவில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+