மனதில் இருந்த பாரம்.. புயலை கிளப்பிய ரங்கசாமி! முறிகிறதா புதுச்சேரி பாஜக கூட்டணி?பீகாரில் நடந்துச்சே
புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பது சமீப காலமாக அவர் அளித்து வரும் பேட்டிகளின் வாயிலாக தெரிகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதில் நிதீஷ் குமார் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வென்றதால் அரசில் அதன் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இதனால் அதிருப்தியடைந்த நிதீஷ் குமார், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்.ஜே.டியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

புதுச்சேரியில் பீகார் நிலை
பீகாரில் பாஜகவுக்கு ஏற்பட்ட இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஏற்படுமோ என்ற கேள்வி சமீப கால அரசியல் போக்குகளின் மூலமாக எழத் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் இதற்கு முன் ஆட்சியிலிருந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அரசை முழுமையாக இயக்க முடியாமல் தொடர் புகார்களை அவர் தெரிவித்தார்.

2021 தேர்தல்
இதனை தொடர்ந்து 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று தோல்வியை தழுவியது. திமுக 6 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றிபெற்றன. சுயேட்சைகள் 6 இடங்களில் வென்றனர்.

பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி
இதனை தொடர்ந்து பாஜக தங்களுக்கு முதலமைச்சர் பொறுப்பை வழங்க வேண்டும் என கோரியது. இதற்கு என்.ரங்கசாமி சம்மதிக்காமல் காலம் தாழ்த்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சராக அவர் பதவியேற்றார். அமைச்சரவை தேர்விலும் ஒரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பாஜக மற்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அன்றே சொன்ன காங்கிரஸ்
பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, நிதீஷ் குமார் நிலை என்.ரங்கசாமிக்கு ஏற்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. "புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள்." என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

எகிறிய பாஜக எம்.எல்.ஏக்கள்
அதேபோல், பாஜகவின் தலையீடு அதிகம் இருப்பதாகவும், முதலமைச்சர் என்.ரங்கசாமி அவமதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம், சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், "பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள். நாங்கள் கையெழுத்து போட்டே முதல்வராக்கியுள்ளோம்.

ரங்கசாமி மீது புகார்
எங்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியிலும் இதேநிலைதான். பிரதமர் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஆணையத்தில் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள். நாம் இங்கு கூட்டணி அரசை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன." என்று கூறினார்.

ரங்கசாமி குற்றச்சாட்டு
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மத்திய அரசு நிதியை முறையாக கொடுத்து, சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தில் சில நடைமுறை சிக்கல்களால் தாமதம் ஏற்படுகிறது. அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய நிலை உள்ளது. வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம்." என்று மத்திய அரசை குற்றம்சாட்டினார்.

புயலை கிளப்பிய பேச்சு
இந்த நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரும் குழுவை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்த கருத்துக்கள் புதிய புயலை கிளப்பியுள்ளது. தங்களுக்கு மரியாதை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாவும், அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

மனதில் இருந்த பாரம்
தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று கூறிய அவர், மத்திய அரசு முழு ஒத்துழைப்பைத் தருவதில்லை என்று வேதனையுடன் கூறி உள்ளார். அரசு கொண்டு வரும் மக்களுக்கான திட்டங்கள் முடக்கப்படுவதாகவும், புதுச்சேரிக்கு இன்னும் முழுமையான விடுதலை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவிடம் காட்டிய அந்த லிஸ்ட்! 170 தொகுதிகளில் இறங்குவது யாரெல்லாம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை ‘சுத்து’ போட்ட தேர்தல் பறக்கும் படையினர்.. மதுரை அருகே பரபர -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications