சதி திட்டம்.. உச்சிக்கு கொண்டு போறதா சொல்லி பாதாளத்துல தள்ள பாக்குறாங்க.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபர!
அப்பவே கட்சியில் இருப்பதற்கான தகுதியை இழந்துட்டாரு.. என்னை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை.. ஓம் சக்தி சேகர்
புதுச்சேரி : அ.தி.மு.கவில் இருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என அ.தி.மு.க புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓம் சக்தி சேகர், சதி திட்டம் தீட்டி, உச்சிக்கு கொண்டு செல்வதாக கூறி எடப்பாடி பழனிசாமியை பாதாளத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர் என விமர்சித்துள்ளார்.

கட்சியில் இருந்து நீக்கம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த 5 மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ் மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நேற்று நீக்கப்பட்டனர். பொதுக்குழுவில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.

முக்கிய நிர்வாகிகள்
நேற்று, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கட்ராமன், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன். மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், சையது கான், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், அசோகன், புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ளனர்.

22 பேரை நீக்கிய ஓபிஎஸ்
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடி அறிவிப்பை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட 22 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார் ஓபிஎஸ்.

ஈபிஎஸ்ஸால் நீக்க முடியாது
இந்நிலையில், புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், தன்னை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓம் சக்தி சேகர், "அ.தி.மு.கவில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரமும் இல்லை. அதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தான். என்னை நீக்க வேண்டும் என்றால் அவர்தான் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

சதி திட்டம்
பழனிசாமி திறமையான முதல்வராகவும், ஒருங்கிணைப்பாளரோடு இணைந்து நல்ல முறையில் அ.தி.மு.கவை வழிநடத்தி வந்தார். திடீரென சகுனிகளின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். சதி திட்டம் தீட்டி, உச்சிக்கு கொண்டு செல்வதாக கூறி பழனிசாமியை பாதாளத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர். நாளை இந்த கட்சி மீண்டும் ஒருங்கிணைய போகிறது. மூன்று பேர் ஒருங்கிணைந்த பிறகு, நான்காவது ஆளாக நீங்களும் ஒருங்கிணையப் போகிறீர்கள்.
Recommended Video

தனக்குத்தானே மகுடம்
எடப்பாடி பழனிசாமி தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொள்வார், தானாக தற்காலிக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொள்வார். ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களும், உங்களிடம் பணம் பெற்றவர்களும் தான் உங்களை தற்காலிக பொதுச்செயலாளர் என்று அழைப்பார்கள். கட்சியின் உண்மையான தொண்டர்கள் யாரும் உங்கள் பின்னால் நிற்க மாட்டார்கள்.

தகுதியற்றவர்
அ.தி.மு.கவிற்கு ஒரு தலைமை வரப் போகிறது. அதன்பிறகு புதுச்சேரி மாநிலத்திற்கு ஓம் சக்தி சேகர் தலைமை ஏற்பார். ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய போதே, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருப்பதற்கு தகுதியற்றவராகி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவர் எங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
-
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications