"கூட்டணி குழப்பத்திற்கு திமுகவே காரணம்.!" கார்த்தி சிதம்பரம் சொன்ன பாயிண்டு! உச்சத்தில் சலசலப்பு?
புதுக்கோட்டை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாகக் குழப்பம் நீட்டித்து வரும் நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்- திமுக இடையே நிலவும் குழப்பத்திற்கு திமுகவே காரணம் என்றும் தொகுதிப் பங்கீட்டிற்கு திமுக குழு அமைக்காததே குழப்பத்திற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே திமுக காங்கிரஸ் ஒரே அணியில் பயணித்து வரும் நிலையில், இப்போது அந்தக் கூட்டணியில் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

கூட்டணி தொடர்பாகவும் கூட்டாட்சி தொடர்பாகவும் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திமுக காங்கிரஸ் உறவில் இது விரிசலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
காங்கிரஸ்- திமுக இடையே நிலவும் குழப்பத்திற்கு திமுகவே காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ள கார்த்தி சிதம்பரம், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைக்காததே குழப்பத்திற்குக் காரணம் என்றும் காங்கிரஸ் சார்பில் குழு அமைத்த நிலையில், திமுக காலம் தாழ்த்தி வருகிறது என்றும் விமர்சித்தார்.
மேலும், திமுக காங்கிரஸ் ஒன்றாக இருந்தால் தான் இருவருமே வெல்ல முடியும் என்றும் எங்களை திமுக கூட்டலாகப் பார்க்கக்கூடாது; பெருக்கலாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1967 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பது உண்மை தான் என்றும் காங்கிரஸுக்கு மாநிலத்தில் தனித்து நிற்கும் பலம் இல்லை என்பதும் உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியே பலம் வாய்ந்ததாக மாறி ஆட்சியை அமைக்கும் என்றும் ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால் அது பாஜக ஆட்சியாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications