'இப்ப நான் என்ன சொல்றது' தவெக நிர்வாகியிடம் கொள்கை கேட்ட சிட்டிசன்.. அசிங்கமா போச்சு குமாரு
ராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுகவை தீவிரமாக எதிர்த்து தவெக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் அவர்களின் கொள்கை எதிரியான பாஜக குறித்து விமர்சிக்காதது, விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் தவெக பொதுக்கூட்டத்தின் போது, 'உங்கள் கட்சியின் கொள்கை என்ன' என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்க முடியாமல் தவெக நிர்வாகிகள் தடுமாறினர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக மாவட்ட நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தனர். மாவட்ட நிர்வாகி ஒருவர் மேடையில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது கீழே இருந்து குறுக்கிட்ட பொதுமக்கள் ஒருவர், தவெக கட்சியின் கொள்கை என்ன என்று கேள்வி எழுப்பினர். இதை எதிர்பாராத தவெக நிர்வாகிகள் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியாக நின்றனர்.
மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து போனார். கேள்வி எழுப்பிய நபர், பதில் சொன்னால் தான் செல்வேன் என்று கைக்கட்டி காத்திருந்தார். மக்களும் தவெகவின் கொள்கைகளை கேட்க ஆவலாக இருந்தனர்.
மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் வாய் திறக்காததால் சுதாரித்து கொண்ட மற்றொரு நிர்வாகி, "மதசார்பற்ற சமூக நீதிதான் எங்கள் கொள்கை அண்ணன்" என்றார். திடீரென எங்கிருந்தோ வந்து ஒரு நபர் மேடையில் இருந்தவரிடம் கைக்கொடுத்தார். அதுவரை கொள்கை பற்றி வாய் திறக்காமல் இருந்த நிர்வாகி திடீரென டென்ஷன் ஆனார்.
கேள்வி எழுப்பிய நபரிடம் அவர், "இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க. எங்களது ஆட்கள் மாத்தி.. மாத்தி கொள்கை என்ன'னு விளக்கினாங்களே. வீரக்குமார் என்பவர் மூச்சிறைக்க கத்தினாரே. கொள்கை எதிரி யார் என்ன என்று எல்லாவற்றையும் கூறினாரே. முழித்து கொண்டிருந்தீர்களா. தூங்கிக் கொண்டிருந்தீர்களா" என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர். "அப்போ நான் வெளிய போயிருந்தேன்" என்று கேஷூவலாக பதில் அளித்தார்.
இதனால் சுற்றியிருந்த தவெகவினர் கடுப்பாகி அவரை திட்டி சண்டை போட முயற்சித்தார்கள். மேடையில் இருந்த நிர்வாகிகள், "வேண்டாம்.. சும்மா இருங்க" என்று சமாதானப்படுத்தினார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications