Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயக்குமாருக்காக ஒன்று திரண்ட அதிமுக.. மீண்டும் ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 49 ஆவது வார்டுக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதை தடுத்து நிறுத்திய அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை பிடித்து அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சென்னையில் ஜெயக்குமார் கைது

சென்னையில் ஜெயக்குமார் கைது

நரேஷ் அளித்த புகாரின் பேரில் சென்னையில் கடந்த 21 ஆம் தேதி வீடு புகுந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் ஜாமீன் கிடைக்க ஆர்ப்பாட்டம்

ஜெயக்குமார் ஜாமீன் கிடைக்க ஆர்ப்பாட்டம்

இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வர தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக இன்று சேலம் கோட்டை மைதானத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 திமுக அரசு

திமுக அரசு

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தில்லுமுல்லு செய்து உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை கண்டு பயந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கை போட்டு வருகிறது. அதிமுக ஒரு அசைக்க முடியாத சக்தி.

பொய் வழக்கு

பொய் வழக்கு

அதிமுகவின் இரு கண்களாக எடப்பாடிபழனிசாமி ஆகிய நானும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுகவை இரும்பு கரம் கொண்டு காத்து வருகிறோம். அதிமுக மீது பொய் வழக்குப் போடுவதை திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணமும் பரிசு பொருள்களையும் திமுக கொடுத்துள்ளது.

மாயாஜால வெற்றி

மாயாஜால வெற்றி

அதன் மூலமாக பெற்ற வெற்றிதான் இந்த மாயாஜால வெற்றியே தவிர இது உண்மையான வெற்றி அல்ல. நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் நிச்சயமாக அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும். நான் முதல்வராக இருந்த போது கூட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் எங்காவது இது போல் பணம் கொடுப்பது, கள்ள ஓட்டு போடுவது போன்ற பிரச்சினைகள் நடந்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 கள்ள ஓட்டு

கள்ள ஓட்டு

கள்ள ஓட்டு போடுபவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தால் பிடித்து கொடுப்பவர் மீது வழக்கு போடுகிற அரசாங்கம்தான் திமுக அரசாங்கம். பிடித்து கொடுத்தவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். பிடிபட்டவர் மருத்துவமனையில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் பொய் வழக்குகள்

திமுக ஆட்சியில் பொய் வழக்குகள்

திமுக ஆட்சியில் நானும் நிறைய பொய் புகாரில் சிறைக்கு சென்றுள்ளேன். எத்தனை பொய் வழக்குகளை போட்டாலும் அதற்கு அஞ்சுவோர் நாங்கள் இல்லை என்பதை திமுகவினருக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜெயக்குமாரை புழல் சிறையில் ஓபிஎஸ்ஸை விட்டுவிட்டு தனியே போய் சந்தித்த நிலையில் தற்போதும் தனியாகவே எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டம் நடத்துவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+