Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்காட்டில் சுமதியை கொலை செய்துவிட்டு கணவருக்கு தாலியை பார்சலில் அனுப்பிய வெங்கடேஷ்! பகீர் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவன் அதிர்ச்சியடைந்த நிலையில் அதை அனுப்பியவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (32). லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் இவருக்கும், நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

salem crime

இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. கடந்த 23-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சுமதி, அதன்பின் வீடு திரும்பவில்லை. கணவரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மனைவி காணவில்லை என சண்முகம் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, மாரமங்கலம் மலைக் கிராமத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள மளிகைக் கடையில் ஒரு பார்சலை கொடுத்து, சண்முகத்திடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

அந்தப் பார்சலை பிரித்துப் பார்த்த சண்முகத்திற்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில், சுமதி அணிந்திருந்த தாலி இருந்திருக்கிறது. அந்த தாலியை யார் கொடுத்தனுப்பியது என ஓட்டுநரிடம் சண்முகம் விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் கொடுத்தனுப்பியது என தெரியவந்தது.

வெங்கடேஷிடம் விசாரித்தபோது, "உங்கள் மனைவி சுமதி இந்த தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, உங்களோடு வாழ முடியாது எனக்கூறி எங்கேயோ சென்றுவிட்டார். யார் அவருடன் சென்றார் என்று எனக்குத் தெரியாது" என பதிலளித்துள்ளார். இருப்பினும், போலீஸார் தங்களது பாணியில் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சுமதிக்கும் தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், கடந்த 23-ம் தேதி சுமதியைக் கொலை செய்து, சடலத்தைச் சாக்குமூட்டையில் கட்டி பள்ளத்தில் வீசியதாகவும் வெங்கடேஷ் ஒப்புக் கொண்டார். உடனடியாக, சுமதி உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் மூலம் சுமதிக்கும் வெங்கடேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சண்முகம் வேலைக்குச் சென்ற நேரத்தில், தனது காபி தோட்டத்திற்கு சுமதியை வரவழைத்து வெங்கடேஷ் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில், வெங்கடேஷின் தொலைபேசி அழைப்புகளை சுமதி தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார். வேறு நபர்களுடன் சுமதி பேசியது வெங்கடேஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்த வெங்கடேஷ், உல்லாசமாக இருந்த பின்னர் ஏற்பட்ட தகராறில், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

பின்னர், தாலியைக் கழற்றி எடுத்துக் கொண்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் சடலத்தை வைத்து கட்டி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். குப்பனூர் மலைப்பாதையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வளைவில் இருந்த பள்ளத்தில் சடலத்தை தூக்கி வீசியுள்ளார். சுமதி, வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாக நம்ப வைப்பதற்காகவே, தாலியைப் பார்சலில் அனுப்பி நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+