அபிஷேக் சர்மா பெரிய பேட்ஸ்மேன் இல்லையா.. தம்பி இங்க கொஞ்சம் வாங்க.. ஹர்பஜன் சிங் கொடுத்த பதிலடி!
கொழும்பு: இந்திய அணியின் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஒன்றும் பெரிய பேட்ஸ்மேன் இல்லை.. அவர் பந்தை பார்த்து பேட்டை ஓங்குவதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பதாக விமர்சித்த முகமது ஆமிருக்கு இந்திய ஜாம்பவான் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பு மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அபிஷேக் சர்மா களமிறங்குவாரா என்ற விவாதம் நடந்து வருகிறது. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிஷேக் சர்மா, நேற்றிரவு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

அதேபோல் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும், அபிஷேக் சர்மா விளையாடுவதை உறுதி செய்திருக்கிறார். இதனால் அபிஷேக் சர்மாவின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் பேசுகையில், அபிஷேக் சர்மா ஒன்றும் அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் கிடையாது.
அவர் அனைத்து பந்துகளையும் விளாச வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவர். அத்தனை பந்துகளையும் சிக்ஸ் அடிக்க துடிப்பவர். கொஞ்சம் டீப் கவரில் ஃபீல்டரை நிறுத்தி, உடலுக்குள் பந்தை வீசினால் தடுமாறிவிடுவார். அபிஷேக் சர்மாவிடம் பெரிய பேட்டிங் டெக்னிக் எதுவும் இல்லை என்று விமர்சித்திருந்தார். ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் சர்மாவை விமர்சித்தது ஆச்சரியம் அளித்தது.
முகமது ஆமீரின் இந்த கருத்துக்கு இந்திய ஜாம்பவான் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஹர்பஜன் சிங் பேசுகையில், அபிஷேக் சர்மாவின் பேட்டிங் தரத்தில் உச்சத்தில் இருப்பவர். ஒவ்வொரு போட்டியை வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாடக் கூடியவர். ஒரு முறை அல்ல.. ஒவ்வொரு முறையும் அவரின் ஆட்டம் அப்படிதான் அமைந்திருக்கிறது. நானும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன்..
நான் சொல்கிறேன்.. அபிஷேக் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.. அவரிடம் அத்தனை வகையான ஷாட்களும் உள்ளது.. ஸ்லாகர் என்றால் பந்தை பார்த்து தூக்கி அடித்துவிடுவார்கள்.. அது சரியாக கனெக்ட் செய்யப்பட்டால், அது சிறந்த ஷாட்.. ஒருவேளை விக்கெட் விழுந்தால், ஒன்றும் செய்ய முடியாது.. ஏற்றுக்கொண்டு வெளியேற வேண்டும்..
ஆனால் அபிஷேக் சர்மா அப்படியல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க முயற்சிப்பார் என்பது உண்மைதான். அதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அபிஷேக் சர்மா களத்தில் நிற்கும் கடைசி பந்து வரை அடித்துக் கொண்டே இருப்பார். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்னை என்னுடைய கருத்து என்னவென்றால், அபிஷேக் சர்மாவுக்கு அவர்கள் யாரும் பவுலிங் செய்ததில்லை.. அதனால் அவரை அப்படி விமர்சிப்பது தவறாகும்.
முகமது ஆமீர் நாம் இப்படி பேச வேண்டும் என்றுதான் சொல்கிறார்.. பலரும் இப்படிதான் பேசுவார்கள்.. ஆனால் அபிஷேக் சர்மாவிடம் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நீ யாரென்று காட்டுவிடு.. உன்னால் என்ன செய்ய முடியும் என்று நிரூபித்துவிடு.. ஒருவேளை அபிஷேக் சர்மா நீண்ட நேரம் களத்தில் இருந்தால், இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications