For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் ராஜபக்சேவின் ராட்சத கட் அவுட் எரிப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: நீண்ட காலமாக யாழ்ப்பாணம் சாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின் கட் அவுட்டை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

யாழ்ப்பாணம் நகரின் பாட்ரிக்ஸ் சாலையில் நீண்ட நாட்களாக ராட்சத அளவில் வைக்கப்பட்டிருந்தது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்த கட் அவுட். முன்பொரு வடக்கில் வசந்தம் திட்டத்தை பிரபலப்படுத்த அவர் யாழ் நகருக்கு வந்தபோது அவரை வரவேற்று வைக்கப்பட்டதாம்.

Cut-out of Rajapaksa burnt in Jaffna

வடக்குப் பகுதியின் மிலிடெரி கவர்னர் மேஜர் சந்திரசிரி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருவரும் இதனை வைத்திருந்தார்கள்.

இந்த கட் அவுட்டை நேற்று புதன்கிழமை அதிகாலை யாரோ சிலர் தீயிட்டு கொளுத்தினர்.

கடந்த சில தினங்களாகவே இந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சே கட்அவுட்டுகள் மற்றும் பதாகைகள் காணாமல் போய்க் கொண்டுள்ளதாக ராணுவம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த கட் அவுட் எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆயுதமேந்திய படையினரை யாழ் தெருக்களில் குவித்துள்ளது இலங்கை அரசு.

English summary
A large cut-out of SL president Mahinda Rajapaksa, has been burnt down in Jaffna city in the early hours of Wednesday. Coinciding with this incident, the SL military has beefed up the presence of armed soldiers in the streets of Jaffna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X