For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டிஷ் பிரதமரை கோமாளி, எருமை என விமர்சித்த இலங்கை அரசு ஊடகம்!

By Shankar
Google Oneindia Tamil News

Daily News slammed Cameron
கொழும்பு: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஊடகமான டெய்லி நியூஸ் அவரை பட்டிக்காட்டான், கோமாளி, எருமை என விமர்சித்துள்ளது.

கேமரூன் விடுத்த கோரிக்கை தொடர்பாக அவர் பெரிய மன்னிப்பை கோரவேண்டும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்தப் பத்திரிகையின் தலையங்கத்தில், "இலங்கையில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்காக வருகை தந்த இந்த 'பட்டிக்காட்டான்' ஒட்டுமொத்தமாக கடுமை குறையாமல் நடந்து கொண்டார்.

இலங்கை மண்ணில் வந்திறங்கிய நேரத்திலிருந்து பிரிட்டிஷ் பிரதமர் ஏகாதிபத்திய மடையனாக நடித்தர். அவரது அவமரியாதை தொட்டு உணரக் கூடியதாக இருந்தது. அவர் விதிவிலக்கான பட்டிக்காட்டனாகக் காணப்பட்டார்.

அவர் தனது பங்கை சரியாக செய்யாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்களின் பாரம்பரிய ஏகாதிபத்திய உடமை சார்ந்த நடத்தையும் முதிர்ச்சியும் இயல்பாக அவரிடம் வெளிப்பட்டது," என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விருந்தோம்பல், வழங்கப்பட்ட மரியாதை மற்றும் பணிவுகளுக்கு மரியாதை தராமல் அரசியல் சிறுபிள்ளைதனத்தில் கேமரூன் ஈடுபட்டார்.

பிரிட்டிஷ் பிரதமரின் கோமளித்தமான நடத்தை தீவிரமான விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தாது என்றாலும் அவரது செயல் ஆழமான அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி நியூஸ் ஆசிரியான ராஜ்பால் அபேநாயக்க இந்த தலையங்கத்தை எழுதியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பலரை அவர் அண்மைய காலமாக தனது ஆசிரியர் தலையங்கம் மூலம் விமர்சித்து வருகிறார்.

English summary
Sri Lankan govt's official media Daily News slammed British PM Cameron for his pro Tamil stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X