For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரனுடன் பேசிய தமிழக அரசியல்வாதிகள் பற்றிய வீடியோ வெளியிடுகிறதாம் இலங்கை!

By Mathi
Google Oneindia Tamil News

Prabakaran
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ரகசியமாக பேசிய தமிழக அரசியல்வாதிகள் பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிடப் போவதாக இலங்கை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட பல நாடுகள், பல நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் பற்றிய தகவல்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என இலங்கை அரசாங்கம் தீர்மானத்துள்ளதாம்.

புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 வீடியோக்களை இலங்கை அதிகாரிகள் தயாரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோக்களில்தான் பிரபாகரனுடன் ரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள், அவர்கள் ரகசியமான முறையில் வன்னிக்கு சென்று வந்தது தொடர்பான காட்சிகளும் உள்ளனவாம்/

வன்னியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு பற்றிய விவரங்களை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் முன் இலங்கை சமர்ப்பிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

மேலும் புலிகளின் 20 முக்கிய உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நார்வே, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் இலங்கை கூறியுள்ளது.

English summary
Faced with the prospect of a third UN human rights council resolution in as many years, Sri Lanka on Sunday launched a diplomatic offensive to counter international pressure over alleged rights abuses during the final phase of its civil war in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X