For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் யாருடன் யார் கூட்டணி அமைக்க வாய்ப்பு? சொல்கிறது நியூஸ் 7

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தற்போதைய அரசியல் சூழலில், அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது 39.92 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது. அதேநேரத்தில் திமுக உடன் தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளதாக 32.80 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. தனித்து போட்டியிட எந்த கட்சிகளும் தயாராக இல்லை. வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகளும், இருக்கிற ஆட்சியை தக்கவைக்கவும், சரிந்து விடாமல் இருக்கவும் மெகா கூட்டணி அமைக்கவேண்டும் என்றும் ஆளும் அதிமுகவும் கணக்கு போட்டு வருகிறது.

2016 Election allaince news 7 survay

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது இருந்த நிலை வேறு... ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வரான பின்னர் காட்சிகள் மாறின. அதிமுக தவிர்க்க முடியாத சக்கியாகிவிட்டதாக கூறப்பட்டது. தனித்து போட்டியிடும் என்று போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் வடகிழக்குப் பருவமழை அதிமுகவின் நிலையை மாற்றிவிட்டது என்றே கூறவேண்டும்.

அதிமுகவும், திமுகவும் வலுவான வங்கிகளுடன்தான் இருக்கின்றன. இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவை சில ஆயிரம் ஓட்டுக்களே எனவேதான் அந்த ஆயிரக்கணக்கான ஓட்டுக்களைக் கூட இழந்து விடக்கூடாது என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இளம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களின் மனநிலை எத்தகையது என்பதை யாராலும் கணிக்க முடியாது எனவே, கூட்டணி பலமாக அமைத்தால் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன அரசியல் கட்சிகள்.

நியூஸ் 7 கருத்துக்கணிப்பு

நியுஸ்7 தமிழ் மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பிலிங்க் கல்வி மற்றம் ஆராய்சி நிறுவனம் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியது. தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய கூட்டணி அமையக்கூடும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுகவை முதன்மையாகக் கொண்டு பல்வேறு கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக - பாஜக கூட்டணி

தற்போதைய அரசியல் சூழலில், அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக 39.92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிமுக தனித்தே போட்டியிடும் என்று 36.54 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

அதிமுக - தேமுதிக கூட்டணி

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதிமுக ஆளுங்கட்சி வரிசையிலும், தேமுதிக எதிர்கட்சி வரிசையிலும் அமர்ந்தன. ஆறுமாதம் கூட கூட்டணி நீடிக்கவில்லை. மோதல்போக்கினால் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக மாறின. எனினும் இந்த தேர்தலிலும் அதிமுக - தேமுதிகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக 14.38 சதவீதம் கூறியுள்ளதுதான் ஆச்சரியமான விசயம்.

அதிமுக உடன் விசிக

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்று 6.84 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், சமக

அதிமுக உடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என்று 2.15 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

திமுக கூட்டணியில் யார் யார்?

திமுகவை தலைமையாகக் கொண்டு அமைய உள்ள கூட்டணி பற்றி கருத்து கூறியுள்ள வாக்காளர்கள், திமுக, தேமுதிக கூட்டணி அமையும் என்று 32.80 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி

திமுக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக 30.50 சதவீதம் பேரும், காங்கிரசுடன் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக 26.51 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திமுக - பாஜக கூட்டணி

திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக மக்கள் கூறியுள்ளனர். 2.46 சதவீதம் வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து திமுக தேர்தலை எதிர்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.

விசிக, காங்கிரஸ்

திமுக தலைமையில் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக 4.50 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதே அணியில் திமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகளுடன் காங்கிரசும் இணைந்து மெகா கூட்டணி ஏற்பட வாய்ப்பிருப்பதாக 3.04 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

திமுக தேமுதிக இணையுமா? தமிழக தேர்தல் களத்தில் யாருடன் யார் இணைந்து மோதுவார்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

English summary
Possiblity election alliance for 2016 TamilNadu assembly election news 7 poll survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X