பா.ம.க.வின் மிரட்டலால் சென்னையில் உடனடியாக திறக்கப்பட்ட மேம்பாலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடபழனி உள்ளிட்ட 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. பணிகள் முடிந்தும் இவை திறப்படாமல் இருந்த இந்தப் பாலங்கள் நேற்று அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

வடபழனி, அண்ணா ஆர்ச், ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில் பணிகள் முடிந்தும் இவை திறக்கப்படாமல் இருந்தன.

இதில் ரெட்டேரி மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருந்தது. மேலும் அண்ணா ஆர்ச் அருகே உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது.

திறக்கப்படாத மேம்பாலங்கள்

திறக்கப்படாத மேம்பாலங்கள்

பணிகள் முடிந்தும் பாலங்கள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பா.ம.க மிரட்டல்

பா.ம.க மிரட்டல்

இந்த மேம்பாலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். அரசு திறக்காவிட்டால் பா.ம.கவே மேம்பாலங்களை திறக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

திடீரென திறக்கப்பட்ட மேம்பாலங்கள்

திடீரென திறக்கப்பட்ட மேம்பாலங்கள்

இந்நிலையில் இந்த 3 மேம்பாலங்களும் நேற்று அதிகாலை முதல் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டன. போக்குவரத்துத்துறை அதிகாரிகளே இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

பொதுமக்கள் மகிழ்ச்சி

ஒரே நாளில் 3 மேம்பாலங்களும் திறக்கப்பட்டதால மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறைந்திருந்தது.

ராமதாஸ் பெருமிதம்

ராமதாஸ் பெருமிதம்

மூன்று மேம்பாலங்களும் திறக்கப்பட்டது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சென்னையில் கட்டப்பட்டுள்ள 3 மேம்பாலங்களையும் பா.ம.க சார்பில் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினோம்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின நடவடிக்கையால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்தப் பாலங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சியே இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three flyovers opened in Chennai, including Vadapalani, Anna arch, and Rettery signal. These flyovers had been opened from yesterday morning. These flyovers opened immediately after the warning of PMK founder Dr.Ramadas.
Please Wait while comments are loading...