For Daily Alerts
Just In
தமிழகத்தின் 5 இடங்களில் தொழில்பயிற்சி மையங்கள்: ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் ஜெயலலிதா கூறுகையில், சின்னசேலம், மணிகண்டம், உடுமலை, காட்டுமன்னார்கோவில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ரூபாய் 40.4 கோடி மதிப்பில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். ரூபாய் 8.25 கோடியில் 5 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தரப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.