கடந்த வாரம் அமைச்சர் பார்வையிட்ட மதரசாவின் சுற்றுச்சுவர் மழையால் இடிந்து விபத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாசாலையில் கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்ட பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னை அண்ணாசாலையில் மதரசா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது.

A school compound collapsed in Chennai Annasalai

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தான் இந்த பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அண்மைக் காலமாக பழமையான அரசு கட்டடங்கள் இடிந்து விழுவது குறிப்பிடத்தக்கத.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A school compound collapsed in Chennai Annasalai. No damage due to this because schools leave today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற