மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் இன்று பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்துள்ளன. முதலாவதாக வாரியத்தின் தலைவராக 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டார்.

Actoress Gautami appointed as a CBFC member

அத்துடன் சேர்த்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இந்தி திரைப்பட நடிகை வித்யா பாலன் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது தமிழ் திரைப்பட நடிகை கவுதமி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Gautami was appointed as member of Central Board of Film Certification.
Please Wait while comments are loading...