பாஜகவுக்கு "பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மென்ட் வீக்கு".. போட்டுத் தாக்கும் குஷ்பு
மெர்சல் படத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தலைநகரம் படத்தில் வடிவேல் காமெடி போல் உள்ளதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, மருத்துவ துறை உள்ளிட்டவற்றுக்கு எதிராக காட்சி உள்ளதால் தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய மீடியாக்களும் விவாதம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக உள்ள 4 காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் குழு முடிவு செய்துள்ளது. தீபாவளி முதல் எங்கும் மெர்சல், எதிலும் மெர்சல் என மெர்சல் குறித்த பேச்சுகளும், விவாதங்களும் வரிசை கட்டியுள்ளன.
பெரும்பாலான மக்கள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுபோல் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
#BJP is like Vadivelu in #Thalainagaram. "building strong basement weak".d way dey r gng v shud say #BJP=BanningJitteryParty. #MersalVsModi
— khushbusundar (@khushsundar) October 20, 2017
அவர் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், தலைநகரத்தில் வடிவேலு ஒரு காமெடி கூறுவார். பில்டிங் ஸ்டிராங், பேஸ்மென்ட் வீக்.. அந்த நிலையில்தான் தற்போது பாஜக உள்ளது. எதற்கெடுத்தாலும் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதை பார்க்கும்போது பாஜக என்பது பாரதிய ஜனதா கட்சி அல்ல, எல்லாவற்றுக்கும் தடை கோரி டென்ஷனாகும் கட்சி (BJP=Banning Jittery Party) என்றுதான் நாம் கூற வேண்டும் என்று குஷ்பு பதிவிட்டுள்ளார்.
-
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications