For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லை அல்வா, தூத்துக்குடி மக்ரூன்… புவிசார் குறியீடு கிடைக்குமா?

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற உணவுப்பண்டங்களாக நெல்லை அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவற்றிர்க்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் இறங்கியுள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச்1ல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நெல்லையில் நடைபெற உள்ளது.

ஒரு உற்பத்திப் பொருளின் சிறப்பினையும், விற்பனை வாய்ப்பினையும் அது தயாரிக்கப்படும் இடத்தின் சிறப்பை காட்ட உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில் அப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை மல்லிக்கு

மதுரை மல்லிக்கு

கடந்த ஆண்டு மதுரை மல்லி, பத்தமடைப்பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தோடர்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள், தஞ்சாவூர் வீணை மற்றும் செட்டிநாட்டுக் கூடைகள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன.

நெல்லை அல்வா

நெல்லை அல்வா

திருநெல்வேலி அல்வா உலக பிரசித்தி பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெறவேண்டும் என்பது அல்வா உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

தூத்துக்குடி மக்ரூன்

தூத்துக்குடி மக்ரூன்

இதேபோல் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகும் மக்ரூன் சுவையான இனிப்பு உணவாகும். இதற்கும் புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேவு, கடலைமிட்டாய்

சேவு, கடலைமிட்டாய்

இவை தவிர சாத்தூர் சேவு, கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முருக்கு போன்றவைகளும் பிரச்சித்த தென்மாவட்ட உணவுப் பண்டங்களாகும்.

சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

ஏற்கனவே சேலம் மாம்பழம், ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட 7 பொருட்களுக்கு புவிசார்குறியீடு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு

அதேபோல அல்வா, மக்ரூன் ஆகிய உணவு பண்டங்களின் பழமை, சுவை, தனித்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவற்றுக்கு மத்திய அரசால் வழங்கப்படும அங்கீகாரமான புவிசார் குறியீடு பெறுவதற்கான வழிமுறை குறிதது ஆராய கலந்தாய்வு கூட்டம் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவ கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வாளகத்தில் மார்ச் 1ம் தேதி நடக்கிறது.

விழிப்புணர்வு அவசியம்

விழிப்புணர்வு அவசியம்

இதில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்தின் புவிசார் குறியீட்டுக்கான உதவி பதிவாளர் சின்னராஜா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அல்வா, மக்ரூன் உணவுப் பொருட்களை தயார் செய்யும் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் பிரதாபன் தெரிவித்துள்ளார். பங்கேற்க விரும்புபவர்கள் 94440 42046 அல்லது 94862 58393 இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும்.

English summary
The Veterinary College and Research Institute (VC and RI) here will organise an awareness camp on March 1 regarding getting Geographical Indication (GI) for halwa and macroon, popular snacks from the southern districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X